டாடாவில் இந்த எலக்ட்ரிக் காரை வாங்குவதாக இருந்தால் இந்த பேட்டரியில் வாங்குங்க!! சார்ஜ் செய்யும் நேரம் குறைவு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக இருக்கும் கார் நிறுவனம். இந்த நிறுவனத்தின் நெக்ஸான் இவி (Nexon EV) ஆனது நம் நாட்டு சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் புதிய 45kWh பேட்டரி ஆப்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பேட்டரி உடன் கிடைக்கும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் முக்கியமான மற்ற 5 சிறப்பம்சங்களை பற்றி இனி பார்க்கலாம்.

பேட்டரி ஆப்ஷன்ஸ் & விலை: டாடா நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார் தற்சமயம் மொத்தம் 3 விதமான பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 பேட்டரி ஆப்ஷன்களுள் ஒன்றாக புதியதாக இணைந்திருப்பது 45kWh பேட்டரி ஆகும். இந்த பேட்டரியை நெக்ஸான் இவி காரின் கிரியேட்டீவ் வேரியண்ட்டில் இருந்து பெறலாம். 45kWh பேட்டரி ஆப்ஷன் உடன் நெக்ஸான் இவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

tata nexon ev with 45kwh

ரேஞ்ச்: நெக்ஸான் இவி காரில் 40.5kWh பேட்டரி ஆப்ஷன் மூலம் 465கிமீ ரேஞ்சை பெற முடிகிறது. அதேநேரம், புதிய 45kWh பேட்டரி மூலமாக சற்று கூடுதலாக 489கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என ARAI சான்றளித்துள்ளது. நிஜ உலகில் 489கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியாது என்றாலும், நிச்சயமாக 400கிமீ-க்கும் அதிக தொலைவிற்கு பயணிக்கலாம்.\

பவர்டிரெயின்: பேட்டரியின் அளவு பெரியதாக்கப்பட்டு இருப்பினும், காரின் எலக்ட்ரிக் மோட்டார் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. இதன்படி, 45kWh பேட்டரியை பெறும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரிலும் அதிகப்பட்சமாக 145 எச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இன்னும் சொல்லப்போனால், 40.5kWh பேட்டரிக்கும், 45kWh பேட்டரிக்கும் அளவில் எந்த வித்தியாசமும் கிடையாது. கூடுதலாக 15% திறனை புதிய 45kWh பேட்டரியில் அதே அளவில் டாடா நிறுவனம் அடக்கியுள்ளது.

சார்ஜிங்: புதிய 45kWh பேட்டரியை வெறும் 48 நிமிடங்களில் 10%-இல் இருந்து 80% சார்ஜ் நிரப்பிவிட முடியும். அதுவே 40.5kWh பேட்டரியை 10%- 80% சார்ஜ் நிரப்ப 56 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இதன் மூலமாக, நெக்ஸான் இவி காரின் பேட்டரி சார்ஜிங் விஷயத்திலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கவனம் செலுத்தி இருப்பதை அறிய முடிகிறது.

நெக்ஸான் இவி ரெட் டார்க் எடிசன்: நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரில் புதியதாக ரெட் டார்க் எடிசனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரின் எம்பவர்டு+ வேரியண்ட்டில் இந்த ரெட் டார்க் எடிசன் கிடைக்கும். இந்த புதிய ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.19 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எம்பவர்டு+ வேரியண்ட்டின் விலையை காட்டிலும் ரூ.20,000 மட்டுமே அதிகமாகும்.

இந்த ரெட் டார்க் எடிசனில் பெயருக்கேற்ப நெக்ஸான் இவி கார் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும். அலாய் சக்கரங்கள் 16 இன்ச்சில் கருப்பு நிறத்தில் கிடைக்கும். காருக்கு உள்ளே டேஸ்போர்டு கருப்பு நிறத்தில் இருக்க, கேபின் முழுவதும் சிவப்பு நிறத்தில் கிடைக்கும். இதற்கேற்ப இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டங்களும் ரெட் டார்க் தீமில் இந்த ஸ்பெஷல் எடிசனில் இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் விரிவடைந்து இருப்பதில் டாடா நெக்ஸானின் பங்களிப்பும் முக்கியமான ஒன்றாகும். இதன் காரணமாகவே, இந்த எலக்ட்ரிக் காரில் டாடா நிறுவனம் அவ்வப்போது அப்டேட்களை கொண்டுவந்து விடுகிறது. அந்த வகையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள 45kWh பேட்டரி ஆப்ஷன் ஆனது நெக்ஸான் இவி விற்பனையை அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Sunday, September 29, 2024, 22:05 [IST]
English summary
Tata nexon ev electric car with 45 kwh battery check all details here
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+