எலெக்ட்ரிக் கார்ல லாங் டிரைவ் போக முடியாதுன்னு யார் சொன்னது? இந்த காரை வாங்குங்க இந்தியாவையே சுத்தலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று தனது நெக்ஸான் காரின் சிஎன்ஜி வேரியன்டை அறிமுகப்படுத்திய கையோடு அடுத்ததாக எலெக்ட்ரிக் வெர்ஷன்-ன் பெரிய பேட்டரி பேக் கொண்ட காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூபாய் 13.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. அதிகபட்சமாக இந்த கார் ரூ17.19 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று தனது நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் பெரிய பேட்டரி பேக் கொண்ட காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பேஸ் வேரியண்டாக கிரியேட்டிவ் 45 என்ற வேரியண்ட் ரூபாய் 13.99 லட்சம் என்ற விலையில் தற்போது அறிமுகமாகபடுத்தியுள்ளது.

Tata Nexon EV LR Launched

அடுத்ததாக ஃபியர்லெஸ் 45 என்ற வேரியன்ட் ரூபாய் 14.99 லட்சம் என்ற விலையிலும், எம்பவர்டு 45 என்ற வேரியன்ட் ரூபாய் 15.9 லட்சம் என்ற விலையிலும் டாப் மாடல் எம்பவர்டு + என்ற வேரியன்ட் ரூ16.99 லட்சம் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

டாடா நெக்ஸான் காரின் ரெட் டார்க் எடிஷன் காரும் என்பவர்டு 45 பிளஸ் வேரியண்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த கார் சற்று கூடுதல் விலையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ 17.99 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற எம்பவர்டு 45 பிளஸ் வேரியன்ட் காரைவிட ரூபாய் 20,000 அதிகமாகும்.

Tata Nexon EV LR Launched

இந்த டாடா நெக்ஸான் காரில் புதிய பேட்டரி பேக் பொருத்தப்பட்ட நிலையில் இந்த பேட்டரி பேக்குடன் இந்த 489 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என அராய் சான்று அளித்துள்ளது. டாடா நிறுவனம் சி75 என்ற ரேஞ்சை கணக்கிடுகிறது. அதன்படி பார்த்தால் இந்த கார் 350 முதல் 370 கிலோ மீட்டர் வரை ஒரு முறை சார்ஜ் போட்டால் ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் தற்போது பெரிய பேட்டரி பேக்கை இந்த காரில் பொருத்தியுள்ள நிலையில் இந்த பேட்டரி 15 சதவீதம் கூடுதல் மின்சக்தியை சேமிக்கும் திறன் கொண்ட என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏற்கனவே உள்ள 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் சிறிய அளவில் தான் உள்ளது.

Tata Nexon EV LR Launched

லாங் ரேஞ்ச் பேட்டரியும் தற்போது அதே அளவில் தான் இந்த பேட்டரி பேக்கும் இருப்பதாக நிரூபணம் தெரிவித்துள்ளது. மேலும் சார்ஜிங் நேரமும் அதே 40 முதல் 56 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீத சார்ஜை ஏற்றி விடும் என தெரிவித்துள்ளது. இதற்கு ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்த வேண்டும்.

இந்த பெரிய பேட்டரி பேக்கில் முன்பக்க ஸ்டோரேஜ் வசதி 15சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோக இந்த காரில் கூடுதலாக வாய்ஸ் அசிஸ்டன்ட் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்டுகள் ஆகியவை கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. ரெட் டார்க் எடிஷனல் மட்டும் பல விஷுவல் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கருப்பு நிற வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 16இன்ச் கருப்பு நிற அலாய் வீலும், சிவப்பு நிற லெதர் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ரெட்டார்க் நிற எடிசனில் காரின் உட்புறமும் வெளிப்புறமும் சிவப்பு நிற ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் உள்ள யூஐ மற்றும் யூஎக்ஸ் ஆகிய வடிவமைப்புகள் இதே ஆக்செண்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பதற்கு இந்த கார் வித்தியாசமான லுக்கில் இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த காரில் வெல்கம் மற்றும் குட்பை சொல்லக்கூடிய சீக்குவன்ஸ் எல்இடி டிஆர்எல் லைட்டிங்கை வழங்கியுள்ளது. இதில் சார்ஜிங் இன்டிகேட்டரும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் காரின் உட்பகுதியில் 31.27 சென்டிமீட்டர் கொண்ட டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேயும் வெஹிகிள் டு வெஹிக்கிள், வெகிஹில் டு லோடு டெக்னாலஜி மூலம் இயங்கும் திறன் கொண்ட பல்வேறு வகை மேம்பட தொழில்நுட்பங்கள் உள்ளன.

தற்போது நீட்டிக்கப்பட்ட ரேஞ்சுடன் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமாகியுள்ள நிலையில், இந்திய மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் எம் ஜி விண்ட்ஸர் இவி காருடன் இந்த கார் நேரடியாக போட்டியிடுகிறது. அந்த கார் ரூபாய் 13.49 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதனால் மார்க்கெட்டில் போட்டி வலுத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இப்படியான காரை அந்நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது அந்நிறுவன ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் இந்த காரை விரும்பி வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 24, 2024, 19:17 [IST]
English summary
Tata nexon ev lr launched 1399 lakh 489 km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X