ஆடி-பிஎம்டபிள்யூ காருக்கே டஃப் கொடுக்கும் டாடா கார்! இப்படி ஒரு மேற்கூரையை நெக்ஸான் பெறுவது இதுவே முதல் முறை!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸான் (Nexon) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், இது பயணிகளுக்கு பாதுகாப்பு தருவதில் குல தெய்வங்களுக்கே டஃப் கொடுக்கக் கூடிய ஓர் கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. அந்த அளவிற்கே அதிக பாதுகாப்பு திறனைக் கொண்ட கார் மாடல் நெக்ஸான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த கார் பாதுகாப்பு தரும் விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையேப் பெற்றிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, இந்தியாவில் நான்கு விதமான அவதாரங்களில் இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய நான்கு விதமான வெர்ஷன்களில் டாடா நெக்ஸான் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலுக்கே டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் (Dual-Pane Panoramic Sunroof) எனும் அம்சத்தை வழங்கி அழகு பார்த்திருக்கின்றது டாடா மோட்டார்ஸ்.

Tata nexon ev red dark interior design

இந்த அம்சத்தை நிறுவனம் நெக்ஸான் இவி (Nexon EV)-யிலேயே வழங்கியிருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் தற்போது நெக்ஸான் இவி-யில் புதிதாக ரெட் ஹாட் டார்க் (Red Hot Dark) எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதிலேயே டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப்-ஐ டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்து உள்ளது.

இந்த அம்சத்தை நெக்ஸானின் வேறு எந்த வெர்ஷனிலும் பார்க்க முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. அதாவது, வழக்கமான நெக்ஸான் இவி, நெக்ஸான் பெட்ரோல், நெக்ஸான் டீசல் மற்றும் நெக்ஸான் சிஎன்ஜி என எதிலும் பார்க்க முடியாது. வரும் பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே டாடா மோட்டார்ஸ் தன்னுடைய அதிக பாதுகாப்பு திறன்மிக்க இந்த கார் மாடலில் டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப்-ஐ அறிமுகம் செய்திருக்கின்றது.

Tata nexon panoramic sunroof launched

விஜயதசமி மற்றும் தீபாவளி ஆகிய முக்கிய பண்டிகைகள் விரைவிலேயே இந்தியாவில் கொண்டாடப்பட இருக்கின்றது. இந்த விழாக் காலத்தில் புதிய வாகன விற்பனை மிக சிறப்பாக இருக்கும். இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டே வாகன உற்பத்தியாளர்கள் சிறப்பு பதிப்புகளையும், புதிய வேரியண்டுகளையும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கார் மாடல்களையும் விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையிலேயே டாடாவும் அதன் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் மாடலான நெக்ஸான் இவியில் புதிய ரெட் ஹாட் டார்க் எடிசனை விற்பனைக்குக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிரீமியம் அம்சங்களை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களை இதன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் போன்ற சூப்பரான அம்சங்களையும் அது வழங்கியிருக்கின்றது.

அதிலும், நெக்ஸான் இவி-யின் ஃபியர்லெஸ் பிளஸ் ட்ரிம்மில் மட்டுமே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. வேறு எந்த வேரியண்டிலும் இது வழங்கியது தெரியவில்லை. விரைவில் இன்னும் சில வேரியண்டுகளில் இந்த அம்சத்தை டாடா மோட்டார்ஸ் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெக்ஸான் இவி ரெட் ஹாட் டார்க் எடிசன் வழக்கமான நெக்ஸான் இவி-யைக் காட்டிலும் அதிக அழகுமிக்க மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பதிப்பாகக் காட்சியளிக்கின்றது.

டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் மட்டுமல்ல இன்னும் பல பிரத்யேக அம்சங்களையும் இது தாங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோக் கொண்ட திரை ஒன்று வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, 10.25 அங்குல திரை ஒன்று டிரைவருக்காகவும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கேமிராவும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் கார் மாடலுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இதன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்டு டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப் வசதியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2024, 11:50 [IST]
English summary
Tata nexon launches dual pane panoramic sunroof to enhance appeal and sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+