மஹிந்திரா காரை வாங்க போனவங்க எல்லாம் அப்படியே திரும்ப போறாங்க!! டாடா நெக்ஸான் இன்னும் குறைவான விலையில்...!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் நெக்ஸான் காரில் புதியதாக சில எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால், இனி டாடா நெக்ஸான் காரை குறைவான விலையிலும் வாங்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது. எவ்வளவு குறைவான விலையில் நெக்ஸான் காரை வாங்கலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார்களுள் ஒன்று டாடா நெக்ஸான் ஆகும். இன்னும் சொல்லப்போனால், கார்கள் மார்க்கெட்டில் டாடா மோட்டார்ஸுக்கு சமீப காலத்தில் ஓர் நிலையான இடத்தை பெற்றுதந்தது நெக்ஸான் ஆகும். இருப்பினும், நெக்ஸானை டாடா நிறுவனம் அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது.

இந்த வகையில், டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது, நெக்ஸானில் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நெக்ஸான் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் பெயர் 'ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்)' (Smart (O)) ஆகும்.
இந்த புதிய வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட் பெட்ரோல் என்ஜின் உடன் கிடைக்கும். விலை குறைவானதாக இருப்பினும், இந்த எண்ட்ரீ-லெவல் பெட்ரோல் நெக்ஸான் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டி.ஆர்.எல்-கள், எல்இடி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி, டிரைவ் மோட்கள், ஒளிரக்கூடிய லோகோ உடன் ட்வின்-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், முன் பவர் ஜன்னல்கள் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவற்றையும் புதிய நெக்ஸான் ஸ்மார்ட் (ஆப்ஷ்னல்) வேரியண்ட்டில் பெறலாம். இந்த வேரியண்ட் மட்டுமில்லாமல், டீசல் என்ஜின் உடன் நெக்ஸான் காரில் புதியதாக ஸ்மார்ட்+ மற்றும் ஸ்மார்ட்+ எஸ் என 2 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதில், ஸ்மார்ட்+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சமாகவும், ஸ்மார்ட்+ எஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.59 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பெட்ரோல் என்ஜின் உடன் நெக்ஸான் ஸ்மார்ட்+ மற்றும் ஸ்மார்ட்+ எஸ் வேரியண்ட்களின் விலைகள் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன.

பெட்ரோல் என்ஜின் உடன் நெக்ஸான் ஸ்மார்ட்+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.31,000 குறைக்கப்பட்டு ரூ.8.89 லட்சமாகவும், ஸ்மார்ட்+ எஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.41,000 குறைக்கப்பட்டு ரூ.9.39 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் காரில் 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாகவும், டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறன் வரையிலும் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளன. இந்த என்ஜின்கள் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஏஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான் காரின் விற்பனை சமீப காலமாக கணிசமாக குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, மஹிந்திரா நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரை வாங்கி உள்ளது. இதனால், நெக்ஸான் கார்களின் விற்பனையை அதிகரிக்க இவ்வாறு புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்களின் அறிமுகங்கள் அவசியமான ஒன்றே.


Click it and Unblock the Notifications








