இந்தியாவே இதுக்காக தான் வெயிட் பண்ணுச்சு! மொட்ட மாடி ஜன்னல் ஆப்ஷனுடன் வரும் நெக்ஸான் கார்!
டாடா நிறுவனம் தனது நெக்ஸான் சன்ரூஃப் மற்றும் சில அம்சங்களை உட்புகுத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் பல்வேறு அப்டேட்களுடன் வெளியான நிலையில் இந்த அப்டேட்டை டாடா நிறுவனம் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரின் விற்பனை எதிர்பார்த்ததை விட சரிவை சந்தித்தது அதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒரு முக்கியமான காரணமாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் வருகையும் இருக்கிறது. இந்த கார் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் விற்பனைக்கு தற்போது அறிமுகமாகியுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் அந்தக் கார் இருக்கும் செக்மெண்டில் உள்ள மற்ற கார்களில் இல்லாத பல்வேறு அம்சங்கள் இதில் உட்பகுத்தப்பட்டுள்ளன. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தனது நெக்ஸான் காரையும் அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களை தற்போது சன் ரூஃப் அம்சம் மிகப்பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.
நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட காரில் பானரோமிக் சன்ரூஃப் உடன் வரும் முதல் கார் இதுதான். இந்த காரணத்திற்காகவே மஹிந்திராவின் இந்த 3எக்ஸ்ஓ காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் எதிர்பார்த்ததை விட அதிகமான புக்கிங் குவிந்தது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் புக்கிங் துவங்கிய ஒரு மணி நேரத்திலேயே 50,000 பேர் இந்த காரை புக் செய்தார்கள்.

இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நேரடி போட்டியாளரின் காருக்கு போட்டியாக தனது தயாரிப்பையும் கொடுப்பதற்காக தனது நெக்ஸான் காரில் சன்ரூஃப் அம்சத்தையும் மற்ற சில அம்சங்களையும் வழங்கி புதிய அப்டேட்டை செய்து வெளியிடப் போகிறது. அதன்படி இந்த அப்டேட் செய்யப்பட்ட காரின் ஸ்பை புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படத்தின்படி மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் உள்ள அதே அளவிலான சன் ரூஃப் தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சன் ரூஃப் ஏ பில்லர் முதல் சி பில்லர் வரை வழங்கப்பட்டுள்ளது. இதில் திறக்கக்கூடிய அம்சம் பி பில்லர் வரை உள்ள பகுதி மட்டுமே திறக்கக் கூடியதாக இருக்கிறது.
இதன் அளவுகளை பொருத்தவரை மகிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் உள்ள அளவுகள் தான் இருக்கிறது. இதில் பின்பக்க சீட்டில் அமர்ந்திருக்கும் பயணிகளும் இந்த சன் ரூஃப்பை பயன்படுத்தி கொள்ள முடியும் . நெக்ஸான் காரை பொருத்தவரை சிங்கிள் பேன் வாய்ஸ் பேஸ்டு பானரோமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சன்ரூஃப் கார் நெக்ஸான் காரின் டாப் வேரியன்டில் மட்டும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது தற்போது விற்பனையாகும் ஸ்மார்ட் பிளஸ் எஸ் வேரியன்டிற்கு மேல் உள்ள அனைத்து வேரியன்ட்களில் மட்டும் இது இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக கூடுதலாக நெக்ஸான் கார்களில் இரண்டு அடாஸ் சிஸ்டம் பொருத்தப்படுகிறது. இதில் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஸ்மார்ட் ஸ்டியரிங் மோடுகள், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மகேந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரை பொறுத்தவரை பின்பக்க சீட்டுகளுக்கு ஏசி வென்ட்கள் அனைத்து வேரியன்ட்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. சாஃப்ட் டச் லெதர் கொண்டு இந்த காரின் டேஷ்போர்டு மற்றும் டோர் பகுதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெக்ஸான் காரை பொருத்தவரை வென்டிலேட்டட் லெதர் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெண்டிலேட் லெதர் சீட் ஆப்ஷன் இந்த காரில் இல்லை.
பாதுகாப்பு ரேட்டிங்கே பொறுத்தவரை டாடாவின் நெக்ஸான் காரும் மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரும் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில் நெக்ஸான் கார் 5ஸ்டார்களையும்,எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் 4 ஸ்டாரர்களையும் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட பாதுகாப்பு அம்சத்தில் இந்த இரண்டு கார்களும் ஒரே விதமான ரேட்டிங்கை பெற்றுள்ளது என கூறலாம்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் டாடா நெக்ஸான் காரின் விற்பனை சரிவை சந்தித்ததை தொடர்ந்து, டாடா நிறுவனம் விரைவில் இந்த சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்டை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இதன் விலையை பொறுத்த வரை ரூபாய் 16 முதல் 17 லட்சம் என்ற விலையில் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தீபாவளிக்கு முன்னதாக இதை அறிமுகப்படுத்தி விற்பனையை மீண்டும் அதிகரிக்க திட்டமிட்டு வருகிறது.
டாடா நெக்ஸான் காரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2லிட்டர் டர்போபெட்ரோல் இன்ஜின், 1.5லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன் உள்ளன. பெட்ரோலின் 120பிஎஸ் பவரையும் 170என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்துகிறது. கியர் ஆப்ஷனை பொறுத்தவரை 6ஸ்பீடு மேனுவல், 5ஸ்பீடு மேனுவல், 6ஸ்பீடு ஏஎம்டி, 7ஸ்பீடு டிசிஏ ஆப்ஷன் உள்ளன. டீசல் இன்ஜினை பொருத்தவரை 115பிஎஸ் பவரையும் 260என்எம் டார்க்திறனையும் வெளிப்படுத்துகிறது. இதன் கியர்ஆப்ஷனை பொறுத்தவரை 6ஸ்பீடு மேனுவல், 6ஸ்பீடு ஏஎம்டிகியர் ஆப்ஷன்கள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக இந்த அப்டேட்டை செய்துள்ளது. மஹிந்திரா காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், மக்களை ஈர்ப்பதற்காக இந்த சன்ரூஃப் ஆப்ஷனை டாடா நிறுவனம் தனது நெக்ஸான் காரில் கொண்டு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








