டாடா நெக்ஸான் அளவுக்கு இருக்குமா புதிய கர்வ் எஸ்யூவி? டாடாவின் பெயரை காப்பாற்ற போகும் அடுத்த தரமான தயாரிப்பு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய எஸ்யூவி காராக கர்வ் (Curvv) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. நெக்ஸான், பஞ்ச் எஸ்யூவி கார்களை போல் கர்வ் டாடா நிறுவனத்திற்கு மற்றொரு அடையாளமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸான் உடன் ஒப்பிடுகையில், டாடா கர்வ் காரில் என்னென்ன சிறப்பம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இனி பார்க்கலாம்.

அளவு: காலம் போக, போக மக்கள் பயன்படுத்தும் கார்களின் அளவு சீரான விகிதத்தில் பரிணாம வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த வகையில், நெக்ஸான் காரை காட்டிலும் கர்வ் எஸ்யூவி கார் ஆனது சுமார் 313மிமீ நீளம் அதிகமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு அரை அடி ஸ்கேல் அளவிற்கு கர்வ் நீளமானதாக இருக்கும். அதேபோல், அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ் அளவுகளிலும் கர்வ் கார் முறையே 6 மிமீ, 10மிமீ மற்றும் 62 மிமீ அளவுகள் பெரியதாக உள்ளது.

tata nexon vs curvv comparison

ஸ்டைல் & டிசைன்: புதிய கர்வ் காரின் முக்கிய சிறப்பம்சமாக அதன் கூபே போன்றதான உடலமைப்பை சொல்லலாம். அதேபோல், கர்வ் காரில் ஃப்ளஷ்-ஃபிட்டிங் டோர் ஹேண்டில்ஸை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி நெக்ஸானை விட கர்வ் காரில் சுமார் 40 லிட்டர்கள் வரையில் அதிகமாக உள்ளது.

பெரிய சக்கரங்கள்: நெக்ஸானின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் கூட 16 இன்ச் அலாய் சக்கரங்கள் தான் வழங்கப்படுகின்றன. ஆனால், பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கர்வ் எஸ்யூவி காரில் இன்னும் அளவில் பெரியதாக 18 இன்ச்சில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு இருந்தன. அதேபோல், கர்வ் காரின் அலாய் சக்கரங்கள் நெக்ஸானில் இருந்து சற்று வித்தியாசமாக பெடல் போன்றதான டிசைனில் உள்ளன.

tata nexon vs curvv comparison

பனோராமிக் சன்ரூஃப்: கார்களில் சன்ரூஃப் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நெக்ஸானில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் வழங்கப்பட்டதே அந்த சமயத்தில் ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது. ஆனால், கர்வ் மாடல் அதனை காட்டிலும் ப்ரீமியம் தரத்திலான பனோராமிக் சன்ரூஃப்-ஐ பெற்றுள்ளது. இதன் காரணமாக, கர்வ் காரின் உட்பக்க தோற்றமும் மாடர்ன் தரத்தில் இருக்கும்.

ஹெரியரில் உள்ளதை போன்றதான ஸ்டேரிங் சக்கரம்: புதிய கர்வ் காரின் உட்பக்கம் ஆனது கிட்டத்தட்ட நெக்ஸான் காரை போன்றே உள்ளது. இருப்பினும் நெக்ஸானில் உள்ளதை போன்றதான ஸ்டேரிங் சக்கரத்தை கொண்டில்லாமல், ஹெரியரில் உள்ளதை போன்றதான 4-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரத்தை புதிய கர்வ் பெற்றுள்ளது. நெக்ஸானில் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்படுகிறது.

tata nexon vs curvv comparison

பெரிய டச் ஸ்க்ரீன்: நெக்ஸான் காரின் டேஸ்போர்டில் 10.25 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரைகள் வழங்கப்படுகின்றன. அதுவே, புதிய கர்வ் காரில் இன்னும் பெரியதாக 12.3 இன்ச்சில் இந்த திரைகள் கிடைக்கும். இதே அளவிலான திரை தான் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நெக்ஸான் இவி எலக்ட்ரிக் காரிலும் கொடுக்கப்படுகிறது.

அடாஸ்: 6 ஏர்பேக்ஸ், 360-டிகிரி கேமரா என நெக்ஸானில் வழங்கப்படும் அத்தனை அம்சங்களையும் கர்வ் காரில் எதிர்பார்க்கிறோம். அதேநேரம் கூடுதலாக அடாஸ் வசதியும் கர்வ் காரில் கொடுக்கப்படலாம். அடாஸ் தொகுப்பின் மூலமாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரியர்-கிராஸ் டிராஃபிக் அலார்ட் மற்றும் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்டவற்றை கர்வ் காரில் பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நெக்ஸான், இந்தியாவின் மிக சிறந்த எஸ்யூவி கார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, கடந்த சில வருடங்களாக நெக்ஸான் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அத்தகைய நெக்ஸான் காரை ஓவர்-ஷேடோவ் செய்யும் அளவிற்கு மற்றொரு டாடா எஸ்யூவி கார் வருகிறது என்றால், கர்வ் காரின் சிறப்பை இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 22:34 [IST]
English summary
Tata nexon vs curvv detailed comparison check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X