1 லட்சம் பேர் நம்பி பயன்படுத்துறாங்க... எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்ய ஒன்றை வீட்டில் வாங்கி போடுங்க!!
உலக எலக்ட்ரிக் வாகனங்கள் தினம் (World EV Day) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் வருங்காலங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் விற்பனை செய்யப்பட உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எலக்ட்ரிக் வாகனங்களினால் மிகவும் சில பிரச்சனைகள் இருந்தாலும், நன்மைகள் தான் அதிகமாக உள்ளது. இதனால், இந்தியா உள்பட பல வெளிநாடுகளில் எலக்ட்ரிக் வாகனங்களை முடிந்தவரையில் விரைவாக கொண்டுவர முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இந்த முயற்சிகளின் விளைவாக, வீடுகளில் இவி சார்ஜர்களை பொருத்துவதில் டாடா க்ரூப் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
வருடந்தோறும் எலக்ட்ரிக் வாகனங்கள் தினம் என ஒன்று கொண்டாடப்படுவதுடன், எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அரசாங்கத்தால் மானியங்கள் உடன் ஊக்கப்படுத்தப்படுகின்றன. இந்த மானியம் ஆனது ஆட்டோமொபைல் நிறுவனங்களை எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தள்ளியுள்ளது. புது, புது இவி நிறுவனங்கள் மார்க்கெட்டில் தோன்றின.

அதேநேரம், டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக புதிய முயற்சிகளிலும், முதலீடுகளிலும் இறங்க ஆரம்பித்தன. இந்த வகையில், டாடா பவர் நிறுவனம் வீடுகளில் இவி சார்ஜர்களை நிறுவுவதில் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை உலக இவி தினத்தை முன்னிட்டு டாடா பவர் இன்று அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, நாட்டின் முக்கியமான மாநகரங்களில் எலக்ட்ரிக் பேருந்துகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்களை அமைப்பதில் 1,100 என்கிற மைல்கல்லை கடந்திருப்பதாகவும் டாடா பவர் அறிவித்துள்ளது. இவ்வாறு, டாடா மோட்டார்ஸில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்களுக்காக மட்டுமல்லாமல், டாடா க்ரூப்பில் உருவாக்கப்படும் அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் சார்ஜிங் பாயிண்ட்களை டாடா பவர் வழங்குகிறது.
டாடா க்ரூப்பில் ஒரு அங்கமாக வகிக்கும் டாடா பவர் நிறுவனம், டாடா க்ரூப்பில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர் பாயிண்ட்களை நாடு முழுவதும் அமைத்து வருகிறது. பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய மற்றும் ஒரு குறிப்பிட்ட வளாகத்திற்குள் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய மற்றும் தனியாக வீட்டில் உபயோகப் படுத்தக்கூடிய என 3 விதமாக இவி சார்ஜர்களை டாடா பவர் வழங்குகிறது.
வீடுகளில் இவி சார்ஜர்களை பொருத்துவது தான் டாடா பவரின் பிரதான பணியாக உள்ளது. ஏனெனில், கஸ்டமர்கள் பெரும்பாலானோர் கேட்பது அதைதான். இதனால்தான், வீடுகளில் இவி சார்ஜர்களை பொருத்துவதில் 1 லட்சத்தை விரைவாக டாடா பவர் எட்டியுள்ளது. அதேநேரம், டாடா பவர் நிறுவனத்தால் 5570க்கும் அதிகமான பொது மற்றும் குறிப்பிட்ட மக்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய இவி சார்ஜிங் பாயிண்ட்களும் நிறுவப்பட்டு உள்ளன.
மால்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் இவி சார்ஜிங் பாயிண்ட்களை டாடா பவர் நிறுவியுள்ளது. இவை அனைத்தையும், மும்பையில் டாடா பவர் நிறுவனத்தின் அட்வான்ஸ்டு நெட்வொர்க் ஆப்ரேஷன் சென்டர் தொடர்ந்து கண்காணிக்கிறது. மிக நீண்ட வருடங்களாக டாடா க்ரூப்பின் ஒரு அங்கமாக இருந்துவரும் டாடா பவருக்கு இவி சார்ஜிங் பாயிண்ட்களை அமைப்பது மட்டும் வேலையில்லை.
டிரேடிங், ஸ்டோரேஜ் சொல்யூஷன், சோலார் செல்கள் என பல்வேறு விதமான வணிகங்களில் டாடா பவர் ஈடுப்பட்டு வருகிறது. மாசு வெளியிடாத சாதனங்கள் மூலமாக 2040ஆம் ஆண்டிற்குள் முற்றிலுமாக கார்பன் மாசு இல்லாத சுற்றுச்சூழலுக்கு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறும் டாடா பவர், இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 1.3 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை நாடு முழுவதும் கொண்டுவருவதற்கு டாடா பவர் போன்ற நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும். குறிப்பாக, வீடுகளில் இவி சார்ஜர்களை நிறுவுவது கட்டாயம் ஆகும். ஏனெனில், பெட்ரோல்/ டீசல் நிலையங்களை தேடி செல்லும் அசவுகரியத்தை கூட வீட்டு உபயோக இவி சார்ஜர்கள் இல்லாமல் செய்துவிடும்.


Click it and Unblock the Notifications








