பைக் மாதிரி மைலேஜ் தரும் டாடா காரின் விலை இவ்ளோதானா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு கௌம்பீருவீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) உள்ளிட்ட கார்களுடன், டாடா பன்ச் போட்டியிட்டு வருகிறது.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான், டாடா பன்ச் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 2 வருடங்கள் மட்டுமே ஆகிறது. சரியாக சொல்வதென்றால், சுமார் 26 மாதங்கள் மட்டுமே கடந்துள்ளன.

Tata Punch

அதற்குள்ளாக உற்பத்தியில் மிகப்பெரிய மைல்கல் (Milestone) ஒன்றை டாடா பன்ச் கார் தற்போது கடந்துள்ளது. 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த பிரம்மாண்டமான மைல்கல் ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 26 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், 3 லட்சம் டாடா பன்ச் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Tata Punch 3 Lakh Unit Production Milestone

செயல்திறனை பொறுத்தவரையில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆகும். இதன் பவர் அவுட்புட் 85 பிஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் ஆகும்.

இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் பவர் அவுட் 73 பிஹெச்பி மற்றும் 103 என்எம் ஆக குறைந்து விடும். அதேபோல் சிஎன்ஜி வெர்ஷன்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் வெர்ஷன்கள் இவ்வளவு அதிகமான மைலேஜை வழங்காது.

டாடா பன்ச் காரின் பெட்ரோல்/மேனுவல் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 18.80 கிலோ மீட்டர் மைலேஜையும் மட்டுமே வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவையும் சிறப்பான மைலேஜ்தான் என்றாலும் கூட, சிஎன்ஜி உடன் ஒப்பிடும்போது, மிகவும் குறைவு.

டாடா பன்ச் காரில், வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை. 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் போன்றவை முக்கியமான வசதிகளாக கருதப்படுகின்றன. அத்துடன் குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில் டாடா பன்ச் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்றுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குறைவான விலையில் கிடைப்பதும், மைலேஜை வாரி வழங்குவதும்தான் டாடா பன்ச் காரின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. அதிக பாதுகாப்பானது என்பது இந்த காருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. வரும் காலங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன.

ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Tata Punch EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், அதுவும் விற்பனையில் சாதனை படைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 4, 2024, 13:50 [IST]
English summary
Tata punch 3 lakh unit production milestone all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+