இது செம காராச்சே! இதை போய் நிப்பாட்டிட்டாங்களே! தீபாவளிக்கு இப்படி ஒரு சோக செய்தியா?
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரின் அட்வெஞ்சர் வேரியன்டை மட்டும் தற்போது விற்பனையில் இருந்து நீக்கி உள்ளது. இந்த வேரியண்ட் மட்டும் தற்போது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? இந்த வேரியன்டிற்கு பதிலாக மற்ற எந்த வேரியண்ட்கள் எல்லாம் தற்போது விற்பனையில் உள்ளன. இந்த கார் குறித்த முழுமையான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது முதல் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. தொடர்ந்து இந்த செக்மெண்டில் அதிகமாக விற்பனையாகும் காராக இந்த கார் தான் இருக்கிறது. மக்களிடமிருந்து இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த காரில் இருப்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

இன்னிலையில் டாடா நிறுவனம் தற்போது சத்தமே இல்லாமல் தனது பஞ்ச் காரின் அட்வெஞ்சர் மற்றும் அட்வெஞ்சர் ரிதம் ஆகிய இரண்டு வேரியன்ட்களை விற்பனையிலிருந்து நீக்கி உள்ளது. இந்த இரண்டு வேரியன்ட்களும் மிட்-வேரியன்ட்களாக விற்பனையாகி வந்தன. தற்போது இந்த இரண்டு வேரியண்ட்களில் எந்த ஒரு ஆப்ஷனும் விற்பனையில் இல்லை.
டாடா பஞ்ச் கார் அட்வெஞ்சர் வேரியண்ட்களில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய இரண்டு வெர்ஷனிலும் விற்பனையிலிருந்து தற்போது இந்த வேரியன்ட்களை நிறுத்திவிட்டது. தற்போது சமீபத்தில் அறிமுகமான கேமியோ எடிஷன் உட்பட்ட மொத்தம் எட்டு வேரியண்டுகள் மட்டுமே விற்பனையில் உள்ளன.

டாடா பஞ்ச் காரின் தற்போது மார்க்கெட்டில் பேஸ் வேரியன்ட் ரூபாய் 6.13 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதே டாப் வேரியன்ட் கிரியேட்டிவ் எஸ் பிளஸ் பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூபாய் 9.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலை தான். ஆன்-ரோடு விலை ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும்.
டாடா நிறுவனம் இந்த பஞ்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன் படி 2025ம் ஆண்டு இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவல்களும் தற்போது வெளியாகவில்லை. ஆனால் தற்போது விற்பனையில் இருக்கும் டாடா பஞ்ச் இவி காரில் இருக்கும் வேரியண்ட்கள் இந்த காரில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

டாடா பஞ்ச் காரில் வரப் போகும் இந்த அப்டேட்டில் வெளிப்புறம் பல முக்கியமான அப்டேட்கள் இடம் பெற உள்ளன. உட்புறமும் சில முக்கியமான அப்டேட்களிடம் பெற வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து லீக்கான தகவல் படி இந்த காரில் வெளிப்பக்கம் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட் செட்டப் சிலிகான் டிஆர்எல் உள்ளிட்டவை இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த வடிவமைப்பில் தற்போது உள்ள காரின் வடிவமைப்பு இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதில் எந்த விதமான மாற்றமும் இல்லை எனது பார்க்கப்படுகிறது.
டாடா பஞ்ச் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 87 பிஎச்பி பவரையும் 115 என்எம் டார்க் திறணையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை சிஎன்ஜி வேரியண்டிலும் விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொருவரிடத்திலும் பொருத்தி விற்பனை செய்கிறது. இது பெட்ரோல் வேரியன்டை விட சற்று விலை அதிகமாக இருக்கும். ஆனால் சிஎன்ஜீ எரிபொருள் அதிக மைலேஜ் தரும் எரிபொருளாக இருப்பதால் மக்கள் பலர் இதையும் விரும்பி வாங்கி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் காரை பொருத்தவரை அட்வெஞ்சர் மற்றும் அக்கம்ப்ளீஷ் ஆகிய இரண்டு பேர் வேரியன்ட்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது. விலையும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதால் அட்வெஞ்சர் வேரியன்டை விட அக்கம்ப்ளிஸ் வேரியண்டிற்கு மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பதால் அட்வெஞ்சர் வேரியன்டை சைலண்டாக நிறுவனம் நிறுத்தி உள்ளது. இதற்கு பதிலாக வேறு ஸ்பெஷல் எடிசன்கள் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications









