டாடா பஞ்ச் காரை இப்படி வாங்கினால் ரூ1.13 லட்சம் மிச்சமாகும்! ஆனா ஒரே ஒரு கண்டிஷன் இருக்குது!

ராணுவ வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் ராணுவ கேண்டினில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் ராணுவ வீரர்கள் வாங்கும் வகையில் விற்பனையாகி வருகிறது. வெளிமார்க்கெட்டில் ராணுவ வீரர்கள் இந்த காரை வாங்குவதற்கும் ராணுவ கேண்டீனில் இந்த காரை வாங்குவதற்கும் எவ்வளவு விலை வித்தியாசம் வருகிறது என ஒரு ஒப்பீட்டை இங்கே காணலாம் வாருங்கள்.

டாடா பஞ்ச் காரைப் பொறுத்தவரை தற்போது மார்க்கெட்டில் 1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல், 1.2 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் 1.2 லிட்டர் சிஎன்ஜி மேனுவல் ஆகிய மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனையாகி வருகிறது. இந்த காரை வாங்குவதன் மூலம் ராணுவ வீரர்கள் அதிகபட்சமாக 1.13 லட்சம் வரை மிச்சம் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. வேரியண்ட் வாரியான விலை ஒப்பீட்டை கீழே காண்போம்.

tata punch csd price list

1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் காரின் பியூர் வேரியண்ட் வெளிமார்க்கெட்டில் ரூ6.12 லட்சம் என்ற விலையிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ5.43 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. பியூர் ரிதம் ரூ6.37 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ5.66 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டிலும் விற்பனையாகிறது.

அட்வெஞ்ச்சர் வேரியன்டை பொறுத்தவரை ரூ6.99 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ6.21 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனிலும் விற்பனையாகிறது. அட்வெஞ்ச்சர் ரிதம் வேரியன்டை பொறுத்தவரை ரூ7.34 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும் ரூ6.52 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனில் இன்னும் விற்பனையாகிறது.

tata punch csd price list

அடுத்ததாக அக்கம்ப்ளீஸ் வேரியன்டை பொறுத்தவரை ரூ7.84 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ6.96 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனிலிலும் விற்பனையாகிறது. அக்கம்ப்ளீஸ் டேஸில் காரைப் பொறுத்தவரை ரூ8.24 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ7.32 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டீனிலிலும் விற்பனையாகிறது. அக்கம்ப்ளீஸ்டு சன்ரூஃப் காரை பொருத்தவரை ரூ8.34 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ராணுவ கேண்டிலில் ரூ7.27 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது.

அக்கம்ப்ளீஸ் டேஸில் சன்ரூஃப் கார் ராணுவ கேண்டினில் விற்பனையில் இல்லை. அடுத்ததாக கிரியேட்டிவ் டிடி காரை பொறுத்தவரை 8.84 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும் 7.85 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனையாகி வருகிறது. கிரியேட்டிவ் டிடி சன்ரூஃப் ஆகிய இரு வேரியண்டுகளும் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை.

tata punch csd price list

1.2 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்டை பொறுத்தவரை அட்வெஞ்ச்சர் வேரியன்ட் ராணுவ மார்க்கெட்டில் விற்பனை இல்லை. அட்வெஞ்ச்சர் ரிதம் வேரியண்ட் வெளிமார்க்கெட்டில் ரூ7.94 லட்சம் என்ற விலையிலும் ராணுவ மார்க்கெட்டில் ரூபாய் 7.50 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. அக்கம்ப்ளிஸ்டு வேரியன்டை பொறுத்தவரை ரூ8.44 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும் ரூ7.49 லட்சம் என்ற விலையில் ராணுவ கேண்டினிலும் விற்பனையாகிறது, ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை.

கிரியேட்டிவ் டிடி வேரியண்டை பொறுத்தவரை ரூ 9.44 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும், ரூ 8.38 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனையாகி வருகிறது. கிரியேட்டிவ் டிடி சன்ரூஃப் வேரியன்ட் கார் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. இதனால் அந்த வேரியன்ட் காரை வாங்க முடியாது.

1.2 லிட்டர் சிஎன்ஜி மேனுவல் காரை பொருத்தவரை பியூர் மற்றும் அக்கம்ப்ளிஸ்டு வேடியன்ட் ராணுவ மார்க்கெட்டில் விற்பனையில் இல்லை. அட்வெஞ்ச்சர் வேரியன்டை பொறுத்தவரை ரூபாய் 7.94 லட்சம் என்ற விலையில் வெளிமார்க்கெட்டிலும்,ரூ 7.50 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனை ஆகிறது. அட்வெஞ்ச்சர் ரிதம் வேரியன்டை பொறுத்தவரை ரூ8.29 லட்சம் என்ற விலையில் விலை மார்க்கெட்டிலும், ரூ7.36 லட்சம் என்ற விலையில் ராணுவ மார்க்கெட்டிலும் விற்பனை ஆகிறது.

அக்ம்பிளீஸ்டு டேஸில் சன்ரூஃப் வேரியன்டை பொருத்தவரை வெளி மார்க்கெட்டில் ரூ9.84 லட்சம் என்ற விலையிலும், ராணுவ மார்க்கெட்டில் ரூ8.74 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக 1.2 லிட்டர் மேனுவல் வேரியண்டில் அட்வெஞ்ச்சர் ரிதம் வேரியண்ட் காரை ராணுவம் மார்க்கெட்டில் வாங்கினால் ரூபாய் 1.13 லட்சம் மிச்சம் ஆகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ராணுவத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்காக ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விலை குறைவு என்பது இருக்கிறது. ராணுவ கேண்டினில் ஜிஎஸ்டி இல்லாமல் இந்த பொருட்களை வாங்க முடியும் என்பதால் கார்களின் விலை வெளிமார்க்கெட்டை விட குறைவாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 18:01 [IST]
English summary
Tata punch csd price vs ex showroom price comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X