கொம்பன் எறங்கீட்டான்... டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியது விலை குறைவான டாடா எலெக்ட்ரிக் கார்... சம்பவம் லோடிங்...
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). வரும் ஜனவரி 17ம் தேதி, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் தற்போது டீலர்ஷிப்களுக்கு (Dealerships) வர தொடங்கியுள்ளது. எனவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள நபர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டிசைனை (Design) பொறுத்தவரையில், முன் பகுதியில் எல்இடி லைட் பார், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப், பின் பகுதியில் 'Y' வடிவ எல்இடி டெயில்லைட்கள், வாஷர் உடன் கூடிய ரியர் வைப்பர், ஸ்டாப் லேம்ப், சுறா துடுப்பு ஆன்டெனா போன்ற அம்சங்கள் எல்லாம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இலுமினேட்டட் டாடா லோகோ உடன் கூடிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்றவை மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும்.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரி ஆப்ஷன்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனினும் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுவது மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில், ஒன்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) நடுத்தர அளவிலும், மற்றொன்றின் டிரைவிங் ரேஞ்ச் அதிகமாகவும் இருக்கலாம்.
இந்திய சந்தையில் சிட்ரோன் இசி3 (Citroen eC3) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா பன்ச் இவி போட்டியிடும். இது இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள 4வது எலெக்ட்ரிக் கார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் உயரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது நடுத்தர வர்க்க மக்களுக்கு ஏற்ற நடைமுறை பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் காராக இருக்கும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








