வெறும் 150 நாளில் 13,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! அப்படி இந்த கார்ல என்ன இருக்குது தெரியுமா?
இந்தியாவில் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் கார்களின் மார்க்கெட் பெரிதாகிக் கொண்டே வருகிறது. மக்கள் பலர் பெட்ரோல் கார்களை வாங்குவதை விட எலெக்ட்ரிக் கார்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் டாடா நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மற்ற நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்தாலும் டாடா நிறுவனம் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யவில்லை.
இந்நிலையில் டாடா நிறுவனத்திலேயே ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி வருகின்றன. பெட்ரோல் கார்கள் வெர்ஷன் எல்லாம் எலெக்ட்ரிக் வெர்ஷன் எல்லாம் அறிமுகம் ஆவதால் மக்கள் பலர் இந்த கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் தான் டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகப்படுத்தியது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது.

டாடா நிறுவனத்தின் பஞ்ச் இவி கார் கடந்த ஜனவரி மாதம் தான் அறிமுகமான நிலையில், அறிமுகமாகிய ஐந்து மாதத்திலேயே இந்த கார் 13,000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது. இந்த கார் அறிமுகமானது முதல் கடந்த மே மாதம் வரை நிறுவனம் விற்பனை செய்த ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் கார் விற்பனையில் இந்த பஞ்ச்கார் மட்டும் 41% பங்கு வைத்துள்ளது.
இதை வைத்து பார்க்கும் போது டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான் மக்கள் மத்தியில் பிரபலமான எலெக்ட்ரிக் காராக மாறி வருவது நமக்கு தெரிகிறது. டாடா நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி அந்நிறுவனம் விற்பனை செய்யும் 36 சதவீதமான எலெக்டரிக் கார்கள் கிராமப்புற பகுதியிலிருந்து வாங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. பஞ்ச் எலெக்ட்ரிக் காரை பொறுத்தவரை டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் தான் அதிக விற்பனையாவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக விற்பனையான பஞ்ச் எலெக்ட்ரிக் காரில் 50 சதவீத விற்பனையை பெற்றுள்ளதாக தெரிகிறது. நகரத்தை வைத்து பார்க்கும் போது இருப்பதிலேயே அதிகமாக பெங்களூர் நகரில் தான் இந்த பஞ்ச் எலெக்ட்ரிக் காருக்கு அதிக வரவேற்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து புனே, திருவனந்தபுரம், திருச்சூர், ஜெய்ப்பூர், ஆகிய நகரங்களிலும் இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் விலை பொருத்தவரை ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் வடிவமைப்பை பொறுத்தவரை நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் வடிவமைப்பு இன்ஸ்பியர் செய்யப்பட்டு பல்வேறு டிசைன் பொருத்தப்பட்டுள்ளன. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் உள்ளது போல லைட் பார் இந்த பஞ்ச் எலெக்ட்ரிக் காரிலும் இருக்கிறது. இதுபோக ஸ்பிலிட் எல்இடி ஹெட்லைட் மறுபடியும் செய்யப்பட்ட பம்பர் ஸ்கிட்பிளேட் உள்ளிட்ட அம்சங்கள் சிறப்பம்சமாக இருக்கிறது.

இந்த காரின் பின்புறத்தை பொருத்தவரை அதன் பெட்ரோல் வெர்ஷன் காரின் வடிவமைப்பு எப்படி இருக்கிறதோ அதேபோலவே தான் இந்த காரும் இருக்கிறது. ஒய் வடிவ டெயில் லைட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுபோக ரூஃபீல் பொருத்தப்பட்டுள்ளன. பம்பர் டிசைன் ஆகியவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த காரில் 16 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
டாடா நிறுவனம் இந்த பஞ்ச் எலெக்ட்ரிக் காரில் மொத்தம் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்குகிறது. அதன்படி 25 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனும், 35 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது இதுபோக 3.3 கிலோ வாட் சார்ஜரும் வழங்கப்படுகிறது. 315 கிலோமீட்டர் வரையிலும் 35 கிலோ வாட்டர் பேக் கொண்ட கார் 421 கிலோமீட்டர் வரையிலும் ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் 10.25 இன்ச் இன்ஃபோடெமென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 10.25 இன்ச் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோ மீட்டர் வரை பேட்டரிக்கான வாரண்டியை அந்நிறுவனம் வழங்குகிறது. இந்த கார் குளோபல் என் கேப் சோதனையில் 5 ஸ்டார் விலை பெற்ற காராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் பஞ்ச் இவி கார் அறிமுகமானது. முதல் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. பெட்ரோல் வெர்ஷன் கார் அறிமுகமானபோது எப்படி மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்ததோ அதேபோல எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் அறிமுகமானபோதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து இந்த காரை மக்கள் பலர் வாங்கி வருகிறார்கள். இந்த விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









