இந்தியாவே காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! விலை இவ்ளோதானா! ஆள் ஆளாளுக்கு ஒன்னு புக் பண்ண போறாங்க
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட் + (Smart +), அட்வென்ஜர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு + (Empowered +) என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை.

இதில், 6 ஏர்பேக்குகள் (Airbags) குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர R16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், சன்ரூஃப், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் 360 டிகிரி சர்ரவுண்ட் வியூ கேமரா ஆகிய வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவை எல்லாம் தவிர, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் 6 ஏர்பேக்குகள் தவிர, மற்ற வசதிகள் எல்லாம் வேரியண்ட்களை பொறுத்து மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதேபோல் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதையும் நாங்கள் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். எனினும் இந்த எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளது மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரானது, ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் லாங் ரேஞ்ச் (Long Range) என 2 மாடல்களில் கிடைக்கும். இதில், ஸ்டாண்டர்டு மாடலில் சிறிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். எனவே இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) குறைவாக இருக்கும்.
மறுபக்கம் லாங் ரேஞ்ச் மாடலில், இதை காட்டிலும் சற்று பெரிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். எனவே இதன் டிரைவிங் ரேஞ்ச் சற்று அதிகமாக இருக்கும். பேட்டரி ஆப்ஷன்களை போல், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் விலை (Price) எவ்வளவு? என்பதும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் இன்னும் ஒரு சில நாட்களில், அனேகமாக நடப்பு ஜனவரி மாத இறுதிக்குள்ளாக, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நீங்கள் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை வாங்குவதாக இருந்தால், தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏனெனில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிட்ரோன் இசி3 (Citroen eC3) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் மிகவும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால், விற்பனையில் சாதனைகளை படைக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








