டாடா பஞ்ச் இவி கார் ஓட்டி பார்த்தா எப்படி இருக்குது? வீடியோ ரிவியூ!
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரின் எலக்ட்ரிக் வெஷனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன் கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று சிறப்பான விற்பனையில் இருக்கும் நிலையில் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் கார் தற்போது அறிமுகமாகி மக்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு டாடா ரசிகர்கள் மத்தியில் மிக நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது அறிமுகமாகியுள்ளது.
இந்த காரை ஓட்டி பார்க்க டிரைவ்ஸ்பார்க் குழுவினருக்கு அழைப்பு வந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவினர் பெங்களூருவில் இந்த காரை ஓட்டி பார்த்தனர். அப்படியாக நாங்கள் காரை ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் காரில் உள்ள அம்சங்கள் குறித்த விரிவான விபரங்களை நாங்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டாடா நிறுவனத்தின் இந்த பஞ்ச் இவி காரைப் பொறுத்தவரை இது 25கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட மீடியம் ரேஞ்ச் வெர்ஷன் மற்றும் 35கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட லாங்க் ரேஞ்ச் விற்பனைக்கு வருகிறது. இதில் மீடியம் ரேஞ்ச் வேரியன்ட் கார் முழு சார்ஜில் 315கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என்றும் லாங்க் ரேஞ்ச் வேரியன்ட் கார் முழு சார்ஜில் 412கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்ய 3.3 கிலோ வாட் ஹவர் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இது மீடியம் ரேஞ்ச் வெர்ஷன் கார் பேட்டரியை 9.4 மணி நேரத்திலும் லாங்க் ரேஞ்ச் 13.5 மணி நேரத்திலும் சார்ஜ் செய்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7.7 கிலோ வாட் ஹவர் சார்ஜரும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








