இந்தியாவே இந்த காருக்காகதான் வெயிட்டிங்! எல்லாரும் வாய் மேலவிரல் வைக்கும் அளவிற்கு செம அப்டேட்!
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த தயாராக இருக்கும் நிலையில், இந்த காரின் ஸ்பைப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்தியாவில் அதிக விரும்பப்படும் காராக இந்த கார் இருக்கிறது. இது காரின் அப்டேட்டில் என்ன என்ன அம்சங்கள் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ள நிலையில், இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை கடந்த 2021ம் ஆண்டு தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தியாவில் மிகப் பிரபலமான காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதி அல்லது 2025ம் ஆண்டு துவக்கத்தில் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில் இந்த காரின் ஸ்பை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது இந்த காரின் முன் பக்க கிரில் பகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட் பகுதி அப்டேட் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது காருக்குள்ளே புதிய டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங் வீல் தற்போது உள்ள காரில் உள்ள அதே டிசைனில் தான் இருக்கிறது.
அப்டேட் செய்யப்பட்ட டாடா பஞ்ச் காரில் முழுமையான டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் வெண்டிலேட்டட் சீட்டுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்ஜினை பொருத்தவரை தற்போது உள்ள காரில் இருக்கும் அதை 1.2 லிட்டர் இன்ஜின் தான் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 88 பிஎஸ் பவரையும் 115 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக வரவுள்ள டாடா பஞ்ச் காரில் மிக முக்கியமாக பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டாடா பஞ்ச் இவி காரில் 10.25 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது. அதே டிஸ்ப்ளே தான் இந்த அப்டேட் செய்யப்பட்ட பஞ்ச் காரிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இதுபோக டாடா அல்ட்ராஸ் காரில் உள்ளதை போல டிரைவ் மோடு பட்டன்களும் இதில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன.
இந்த டிரைவ் மோடு பட்டன்கள் கியர் லிவர் பகுதியில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் மாடலில் ஏற்கனவே இருக்கும் காரில் உள்ள அதே ஸ்டீரிங் வீல்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் டாடா நிறுவனம் சமீப காலமாக தனது கார்களில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டேரிங் வீல்களை பொருத்தி வருகிறது. டாடா பஞ்ச் இவி காரிலும் இதே இரண்டு ஸ்போக் ஸ்டேரிங் வீல் தான் இருக்கிறது.

புதிதாக அப்டேட் செய்யப்பட உள்ள டாடா பஞ்ச் காரில் உள்ள முன்பக்க கிரில் மற்றும் ஹெட்லைட் டிசைன் எல்லாம் ஏற்கனவே விற்பனையாகி வரும் டாடா பஞ்ச் இவி காரில் இருக்கும் அதே வடிவமைப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக முக்கியமாக இதில் 16இன்ச் அலாய் வீல் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு பொருத்தப்படும் எனவும் எதிர்பார்க்கலாம். பின்பக்க லைட்டுகளில் எந்த வித மாற்றங்களும் இல்லாமல் தற்போது இருப்பது போலவே பொருத்தப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஏற்கனவே சொன்னபடி இந்த அப்டேட் செய்யப்படும் காரில் 10.25 இன்ச் கொண்ட முழு டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது போக பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. இன்ஜினை பொறுத்தவரை ஏற்கனவே சொன்னது படி அதே இன்ஜின் தான் இந்த காரில் பொருத்தப்படுகிறது. இதில் சிஎன்ஜி ஆப்ஷனும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன .
டாடா நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களில் சிஎன்ஜி ஆப்ஷனில் ஏஎம்டி கியர் பாக்ஸை பொருத்தி விற்பனை செய்து வருகிறது. அதே போல புதிதாக அப்டேட் செய்யப்படும் டாடா பஞ்ச் காரிலும் சிஎன்ஜி வெர்ஷன் வரும்போது அதில் ஏஎம்டி கியர் ஆப்ஷனும் பொருத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ரூ 6 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் எஸ்யூவி கார்களிலேயே இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதற்கு இந்த காரின் பாதுகாப்பு அம்சமும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த காரில் அப்டேட் வரப்போகிறது என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள். இந்த அப்டேட்டுக்காக இந்தியாவே காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications









