27 கிமீ மைலேஜ் காரை இந்த ரேட்ல விக்க முடியுமா! தீபாவளிக்கு ஜவுளி எடுக்கற மாரி எல்லாரும் வாங்கீட்டு இருக்காங்க!

2024-25ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்கள் (ஏப்ரல்-செப்டம்பர்) முடிவடைந்து விட்டன. இந்த காலகட்டத்தில், அதாவது 2024-25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி (Top-10 SUVs) கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், டாடா பன்ச் (Tata Punch) கார் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், 72,626 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது, நடப்பு 2024-25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், 1,01,820 ஆக உயர்ந்துள்ளது.

இது 40.1 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலம் டாடா பன்ச் கார், இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்து, போட்டி நிறுவனங்களை பிரம்மிக்க வைத்துள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி ரக கார் ஆகும்.

Tata Punch Side View

டாடா பன்ச் காரானது, ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் ஐசி இன்ஜின் வெர்ஷனின் டாப் வேரியண்ட்டின் விலை 10.15 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

ஐசி இன்ஜினை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், சிஎன்ஜி இன்ஜின் அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஆரம்ப விலை 9.99 லட்ச ரூபாயாக இருக்கிறது.

Tata Punch EV

அதே நேரத்தில் எலெக்ட்ரிக் வெர்ஷனின் டாப் வேரியண்ட்டின் விலை 14.29 லட்ச ரூபாயாக உள்ளது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், 25 kWh மற்றும் 35 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதில், 35 kWh பேட்டரி பொருத்தப்பட்ட லாங் ரேஞ்ச் மாடல், 365 கிலோ மீட்டர் ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் கார் (ஐசி இன்ஜின் + எலெக்ட்ரிக்) ஓரளவிற்கு விலை குறைவானதாக இருந்தாலும் கூட, ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். வெர்ஷன் மற்றும் வேரியண்ட்களை பொறுத்து, வசதிகளின் பட்டியல் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் கார், இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எந்த அளவிற்கு பெற்றுள்ளது? என்பதை தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது. இது ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 23:54 [IST]
English summary
Tata punch h1 fy 2024 25 sales report 40 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+