மைலேஜை வாரி வழங்கும் டாடா காரை வாங்க குவியும் மக்கள் - ஹூண்டாய், மாருதி கம்பெனிகளுக்கு என்ன செய்வதுனே தெரியல!!
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எஸ்யூவி கார்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருவதை கார் விற்பனை எண்ணிக்கைகள் குறித்த புள்ளி விபரங்கள் தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அந்த அளவிற்கு இந்தியர்களின் இரசனை நாளுக்கு நாள் எஸ்யூவி கார்கள் பக்கம் சாய்ந்து வருகிறது. இந்திய கார்கள் மார்க்கெட் தற்சமயம் இப்படியிருக்கும் நிலையில், கடந்த 2024 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடந்து முடிந்த கடந்த 2024 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தை டாடா மோட்டார்ஸின் பஞ்ச் பிடித்துள்ளது. அதாவது, எஸ்யூவி ரக கார்கள் என்று மட்டுமில்லாமல், ஹேட்ச்பேக், செடான் ரக கார்கள் என ஒட்டுமொத்தமாகவே டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆக, எஸ்யூவி ரக கார்கள் என்று தனியாக லிஸ்ட் எடுத்து பார்த்தாலும், அதிலிலும் டாடா பஞ்ச் தான் முதலிடம்.

பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி என்ஜின் ஆப்ஷனில் மட்டுமில்லாமல், எலக்ட்ரிக் மோட்டார் உடனும் டாடா பஞ்ச் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, டாடா பஞ்ச் இவி எலக்ட்ரிக் காரும் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த மாதத்தில் 18,238 டாடா பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தில் இந்த அளவிற்கு வேறெந்த காரும் இந்தியாவில் விற்பனையாகவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டு இதே ஜூன் மாதத்தில் வெறும் 10,990 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், டாடா பஞ்ச் கார்களின் விற்பனை ஆனது சுமார் 65.95%, அதாவது 7,248 கார்கள் அதிகரித்துள்ளது. டாடா பஞ்ச் காருக்கு அடுத்து, இந்த வரிசையில் 2வது இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 16,293 ஆகும்.

2023 ஜூன் மாதத்தில் இதனை காட்டிலும் 12.78% குறைவாக 14,447 கிரெட்டா கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா இந்த வரிசையில் 3வது இடத்தை 13,172 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 24.52% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 10,578 பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வரிசையில் 4வது இடத்தில், அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் மஹிந்திரா காரான ஸ்கார்பியோ உள்ளது. ஸ்கார்பியோ கிளாசிக், ஸ்கார்பியோ-என் என இரு விதமான ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் சேர்த்து கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 12,307 ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 ஜூன் மாதத்தில் வெறும் 8,648 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான நெக்ஸான் இந்த வரிசையில் 5வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 12,066 ஆகும். ஆனால், 2023 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது கணிசமாக குறைவாகும். ஏனெனில், அந்த மாதத்தில் 13,827 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் நெக்ஸான் கார்களின் விற்பனை 12.74% குறைந்துள்ளது.
இந்த டாப்-10 லிஸ்ட்டில் 6வது மற்றும் 7வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கைகளுடன் ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சொனெட் உள்ளன. தென்கொரிய கார்களான இவை கடந்த மாதத்தில் முறையே 9,890 மற்றும் 9,816 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களை மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (9,688), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (9,679) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (8,500) உள்ளன.
| Rank | SUV Sales | June'24 | June'23 | Growth (%) YoY |
| 1 | Tata Punch / EV | 18,238 | 10,990 | 65.95 |
| 2 | Hyundai Creta | 16,293 | 14,447 | 12.78 |
| 3 | Maruti Brezza | 13,172 | 10,578 | 24.52 |
| 4 | Mahindra Scorpio / N | 12,307 | 8,648 | 42.31 |
| 5 | Tata Nexon / EV | 12,066 | 13,827 | -12.74 |
| 6 | Hyundai Venue | 9,890 | 11,606 | -14.79 |
| 7 | Kia Sonet | 9,816 | 7,722 | 27.12 |
| 8 | Maruti Fronx | 9,688 | 7,991 | 21.24 |
| 9 | Maruti Grand Vitara | 9,679 | 10,486 | -7.70 |
| 10 | Mahindra XUV 3XO | 8,500 | 5,094 | 66.86 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் காராக தொடர்ச்சியாக 4வது மாதமாக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்துள்ளது. பஞ்ச் கார்களின் விற்பனை அதிகரித்து வருவது டாடா மோட்டார்ஸுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், நெக்ஸான் கார்கள் விற்பனை குறைவது சற்று வருத்தத்தை தரக்கூடியதாகும். இந்த ஜூலை மாதத்தில் இந்த வரிசையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். குறிப்பாக, 10வது இடத்தில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ பல படிகள் முன்னேற்றம் காணும்.


Click it and Unblock the Notifications









