டாடாவின் விலை குறைவான கார் விற்பனையில் இருந்து அகற்றமா!.. இணையத்தில் பரவும் தகவலால் ஷாக்! உண்மை என்ன?
டாடா (Tata) நிறுவனத்தின் மலிவு விலை எஸ்யூவி ரக கார் மாடலாக பஞ்ச் (Punch) இருக்கின்றது. இந்த கார் மாடலையே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விற்பனையில் இருந்து அகற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் உண்மை நிலவரம் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான கார் மாடல்களில் டாடாவின் பஞ்ச் (Tata Punch)-ம் ஒன்றாகும். இது ஓர் மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலாகும். இது ஓர் விலை குறைவான கார் மட்டுமல்ல அதிக பாதுகாப்பு திறன்மிக்க காராகவும் பஞ்ச் காட்சியளிக்கின்றது.

விபத்துகளின்போது பயணிகளின் உயிரைக் காப்பதில் கை தேர்ந்த கார் மாடல் இதுவாகும். ஆமாங்க, டாடா பஞ்ச் ஓர் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் மாடல் ஆகும். இத்தகைய கார் மாடலையே விற்பனையில் இருந்து டாடா மோட்டார்ஸ் வெளியேற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பஞ்ச் கார் மாடலின் குறிப்பிட்ட சில வேரியண்டுகளே விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் பஞ்ச் கார் மாடலின் வரவேற்புக் கிடைக்காத குறிப்பிட்ட சில தேர்வுகளையே அது விற்பனையில் இருந்து வெளியேற்றி இருக்கின்றது. அதேவேளையில் சில புதிய தேர்வுகளையும் விற்பனைக்கு இணைத்திருக்கின்றது.

பஞ்ச் கார் மீதிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இந்த பணியை டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டிருக்கின்றது. புதிதாக மூன்று தேர்வுகளையே அது இணைத்திருக்கின்றது. கிரியேட்டீவ் எம்டி (Creative MT), கிரியேட்டீவ் ஃப்ளாக்ஷிப் எம்டி (Creative Flagship MT) மற்றும் கிரியேட்டீவ் ஏஎம்டி (Creative AMT) ஆகியவையே அந்த தேர்வு ஆகும்.
இவற்றிற்கு விலையாக ரூ. 8.85 லட்சம், ரூ. 9.60 லட்சம் மற்றும் ரூ. 9.45 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதிய ட்ரிம்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய கையோடு சில பழைய தேர்வுகளை அது விற்பனையில் அகற்றி இருக்கின்றது.
கேமோ அட்வென்சர் எம்டி (Camo Adventure MT), கேமோ அட்வென்சர் ரிதம் எம்டி (Camo Adventure Rhythm MT) மற்றும் கேமோ அட்வென்சர் ஏஎம்டி (Camo Adventure AMT) ஆகியவை விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, கிரியேட்டீவ் டூயல் டோன் (Creative dual-tone) மற்றும் கிரியேட்டீவ் ஃப்ளாக்ஷிப் எம்டி டூயல் டோன் (Creative Flagship MT dual-tone) ஆகியவையும் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டு உள்ளன.
இந்தியாவில் டாடா பஞ்ச் கார் 6 லட்சத்து 12 ஆயிரத்து 900 ரூபாய் தொடங்கி ரூ. 10.10 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினை பொருத்த வரை 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் தேர்வில் மட்டுமே இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இந்த மோட்டார் 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதே எஞ்ஜினிலேயே சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. ஆமாங்க, டாடா பஞ்ச் காரை பெட்ரோலில் மட்டுமல்ல சிஎன்ஜி ஆப்ஷனில் வாங்கிக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 76 பிஎச்பி மற்றும் 97 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
இது பெட்ரோல் மோட்டார் வெளிப்படுத்தும் பவரைக் காட்டிலும் சற்று குறைவான திறனே ஆகும். டிரான்ஸ்மிஷனைப் பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார் மாடலுக்கே சிறப்பு சேர்க்கும் விதமாக கூடுதல் சில புதிய தேர்வை விற்பனைக்குச் சேர்த்தும், வரவேற்புக் குறைந்து காணப்பட்ட ஆப்ஷன்களை விற்பனையில் இருந்து அகற்றியும் டாடா நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா பஞ்ச் எலெக்ட்ரிக் ஆப்ஷன் சமீபத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் முழு சார்ஜில் 421 கிமீ ரேஞ்ஜை தரும். ஃபாஸ்ட் சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்போது 56 நிமிஷங்களில் ஃபுல் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். மேலும், 9.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ வேகத்தையும் இது எட்டிவிடும். பஞ்ச் இவிக்கு ஆரம்ப விலையாக ரூ. 10,98,999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications








