6 மாதத்தில் 1 லட்சம் பேர் வாங்கிட்டாங்க! விலை தெரிஞ்சா நீங்களும் இப்பவே வாங்கிடுவீங்க!
டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் கடந்த ஆறு மாதத்தில் டாப் 10 கார் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்து வருகிறது இந்நிலையில். கடந்த ஆறு மாதத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு இந்த குடி புகுந்துள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களுக்கு நல்ல மவுசு அதிகரித்து வருகிறது. முக்கியமாக டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் அறிமுகமானது முதல் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த காரை வாங்கும் நபர்களின் எண்ணிக்கை கூடுவதால் விற்பனை அதிகரித்து வருகிறது. புதிதாக கார் வாங்கும் பலர் இந்த காரை வாங்க விரும்புகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக இந்த காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை மொத்தம் 1,08,451 பஞ்ச் கார்கள் விற்பனையாகி உள்ளன. அதாவது சராசரியாக 18,075 கார்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனையாகி உள்ளது. இதுவே மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் காரை பொறுத்தவரை கடந்த ஆறு மாதத்தில் வெறும் 98,103 வாகனங்கள் தான் விற்பனையாகி உள்ளன.
மூன்றாவது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் 95,486 கார்கள் விற்பனையாகி உள்ளன. டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார்தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த கார் ரூபாய் 6.13 லட்சம் என்ற விலையில் இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. பல்வேறு தருணங்களில் இந்த கார் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் நம்பர் ஒன் காராகவும் இடம் பிடித்துள்ளது.

கடந்த 6 மாத விற்பனை விபரங்களை வைத்து பார்க்கும்போது கடந்த பிப்ரவரி மாதம் 18,438 கார்களும், மார்ச் மாதம் 17 547 கார்களும், ஏப்ரல் மாதம் 19,158 கார்களும், மே மாதம் 18,949 கார்களும், ஜூன் மாதம் 18,238 கார்களும், ஜூலை மாதம் 16,121 கார்களும் விற்பனையாகியுள்ளன ஒட்டுமொத்தமாக 1,08,451 கார்கள் விற்பனையாகி உள்ளது.
டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரை பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் பொதுவாக 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ஆப்ஷனும் கிடைக்கும்.

இந்த காரின் அதிகமான விற்பனைக்கு முக்கியமான காரணம் மைலேஜ் தான். இந்த கார் 18.97 கிலோமீட்டர் மைலேஜ் மேனுவல் கியர் ஆப்ஷனிலும், 18.82 கிலோமீட்டர் மைலேஜ் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனிலும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏழு இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட். கனெக்டெட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற காராக இருக்கிறது. டாடா நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ராஸ் காருக்கு பிறகு 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கார் இதுதான். இதன் காரணமாகவே இந்த காரை பலர் வாங்கி வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பாதுகாப்பான கார்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.
கடந்த ஆறு மாதங்களில் சுமார் 1 லட்சம் வீடுகளுக்கு டாடா பஞ்ச் கார் குடிபுகுந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது. டாடா பஞ்ச் கார் அறிமுகமானது, முதல் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. விரைவில் டாடா நிறுவனம் இந்த பஞ்ச் காரை அப்டேட் செய்த பிறகு இன்னும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஞ்ச் கார் இந்திய மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. சாலையில் பல்வேறு கார்களை காண முடியும் அளவிற்கு அதிகமாக விற்பனையாகி வருகிறது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் முக்கியமான காரணம் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகள் மக்களுக்கு பிடித்தமாக வடிவமைக்கப்பட்டுள்ளது தான் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications









