டாடாவிடம் இருந்து வாங்கிய இந்த அடியிலிருந்து மீள மாருதிக்கு எவ்ளோ காலமாகுமோ! குட்டி கார வச்சு ஆட்டங்காட்றாங்க!

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் தயாரிப்பு ஒன்று மாறியிருக்கின்றது. இது எந்த அளவிற்கு நாட்டில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது என்றால், நாட்டின் நம்பர் 1 கார் மாடல் ஒன்றையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கே அது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் நம்பர் 1 செல்லிங் கார் மாடலாக மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR)-ரே இருந்தது. ஆனால், இப்போது அந்த இடத்தில் அது இல்லை. அதை இந்த இடத்தில் இருந்து தள்ளிவிட்டுவிட்டு தற்போது அந்த இடத்தை டாடா காரே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

அது வேறு எதுவும் இல்லை நிறுவனத்தின் மலிவு விலை கார் மாடலான பஞ்ச் (Punch)-தான் அது. இந்தியாவின் விலை குறைவான எஸ்யூவி ரக கார் மாடல்களில் ஒன்றே இந்த பஞ்ச் ஆகும். மைக்ரோ எஸ்யூவி கார் பிரிவையே இந்த கார் மாடல் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

Tata punch becomes india s best-seller

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்குமான கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. குறிப்பாக மிகுந்து பாதுகாப்பு திறன்மிக்க காராகவும் பஞ்ச் காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களையேக் குவித்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய தர சான்றுடனேயே இந்த கார் சந்தையில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுமாதிரியான அங்கீகாரங்களே அந்த காரை நாட்டின் நம்பர் 1 செல்லிங் கார் மாடலாக தற்போது மாற்றியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜனவரி மாதம் தொடங்கி கடந்த ஜூலை மாதம் வரையில் சுமார் 1.26 லட்சம் யூனிட்டுகள் வரை டாடா பஞ்ச் விற்பனையாகி இருக்கின்றது.

Tata punch

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நடப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் 7 மாதத்தில் மட்டும் கிடைத்த விற்பனை எண்ணிக்கை இதுவாகும். இந்த அதிகபட்ச எண்ணிக்கையை தொட்ட காரணத்தினாலேயே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலாக பஞ்ச் மாறியிருக்கின்றது.

இதற்கு அடுத்தபடியான இடத்திலேயே மாருதி சுஸுகி வேகன்ஆர் இருக்கின்றது. 1.16 லட்சம் யூனிட்டுகள் விற்பனையுடனேயே அது அந்த இடத்தில் இருக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் நம்பர் 1 கார் மாடல் என்கிற இடத்தை வேகன்ஆர் அலங்கரித்து வந்தநிலையில், சமீப சில காலமாக இது டாடா பஞ்ச் இடம் தொடர்ச்சியாக அடி வாங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆகையால், மாருதி சுஸுகிக்கு விழுந்த மிகப் பெரிய அடியாக இது கருதப்படுகின்றது. மாருதி சுஸுகி வேகன்ஆர் கார் மாடலை அடுத்து, நாட்டின் மூன்றாவது பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) இருக்கின்றது. 1.09 லட்சம் யூனிட்டுகள் விற்பனையுடனேயே இந்த இடத்தை அது அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது.

மேலும், நான்காவது இடத்தில் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் மாடலும், ஐந்தாவது இடத்தில் எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி கார் மாடலும் இருக்கின்றன. பிரெஸ்ஸா இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் 1.05 லட்சமும், எர்டிகா 1.04 லட்சம் யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றன.

இந்தியாவின் நம்பர் 1 செல்லிங் கார் மாடலாக பஞ்ச் மாறுவதற்கு அதன் விலை மற்றும் பாதுகாப்பு திறன் மட்டுமே காரணம் இல்லை. இந்த கார் மாடலை பலதரப்பட்ட அவதாரங்களில் டாடா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய அவதாரங்களிலேயே டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனால்தான் இந்தியர்கள் மத்தியில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி மிக அமோகமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் டாடா பஞ்ச் ரூ. 6 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னதாக டாடாவின் இன்டிகா கார் மாடல் இந்திய வாகன உலகில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது. இப்போது பஞ்ச்-க்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்டைப் பார்த்தால், இன்டிகாவையே அது ஓரங்கட்டிவிடும் என தெரிகின்றது. அதிக பாதுகாப்பான டிராவலுக்கு உகந்த கார் மாடலே இதுவாகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 24, 2024, 5:00 [IST]
English summary
Tata punch overtakes maruti wagonr as india s best selling car
மேலும்... #tata motors #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+