27 கிமீ மைலேஜ் வழங்கும் காரை வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்! இவ்ளோ கம்மியான விலையில் கெடச்சா யார்தான் விடுவா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் (December 2023) மாதத்திற்கான டாடா பன்ச் காரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 13,787 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 10,586 ஆக மட்டுமே இருந்தது. இது 30 சதவீத வளர்ச்சி ஆகும்.

Tata Punch iCNG

டாடா பன்ச் காரின் இந்த வளர்ச்சிக்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று விலை (Price). மற்றொன்று மைலேஜ் (Mileage). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலையோ வெறும் 10.10 லட்ச ரூபாயாக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மறுபக்கம் டாடா பன்ச் காரின் பெட்ரோல்/மேனுவல் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வெர்ஷன்கள் ஒரு லிட்டருக்கு 18.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tata Punch EV

அதே நேரத்தில் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி/மேனுவல் வெர்ஷன்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சிஎன்ஜி இன்ஜினில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை.

இந்த குறைவான விலை மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகியவற்றுடன், பல்வேறு அதிநவீன வசதிகள் (Features) மற்றும் பாதுகாப்பு ஆகிய சிறப்பம்சங்களும் இணைந்திருப்பதால்தான், டாடா பன்ச் கார் விற்பனையில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. டாடா பன்ச் காரானது, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா பன்ச் கார் சமீபத்தில்தான் 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்ற பிரம்மாண்டமான மைல்கல்லை கடந்தது. அத்துடன் டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு அதிகாரப்பூர்வமான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின்னர், விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இது ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள மாடல் ஆகும். இதன் காரணமாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 23:51 [IST]
English summary
Tata punch registers 30 per cent growth in december 2023 all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+