27 கிமீ மைலேஜை வாரி வழங்கற காரோட விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் போட்டி போட்டுகிட்டு வாங்கீட்டு இருக்காங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த கார், ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு நேரடி போட்டி மாடல் ஆகும். இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 15,643 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் 14,523 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனையில் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, டாடா பன்ச் கார் அசத்தியுள்ளது.

Tata Punch EV

இது இந்திய சந்தையில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாகும். நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மிகவும் அதிகமாக விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியலில், டாடா பன்ச் கார் 5வது இடத்தை பிடித்துள்ளது. ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 அவதாரங்களில் கிடைப்பது, டாடா பன்ச் காரின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

Tata Punch Seat

இதன் பெட்ரோல் - மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 18.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை விட அதிக மைலேஜை நீங்கள் எதிர்பார்த்தால், டாடா பன்ச் காரின் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். ஏனெனில் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. ஓரளவிற்கு குறைவான விலையில் நல்ல மைலேஜ் வழங்க கூடிய காரை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்!

மறுபக்கம் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன், டாடா பன்ச் இவி (Tata Punch EV) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் 25 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 315 கிலோ மீட்டர் எனவும், 35 kWh பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்களின் டிரைவிங் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரை, ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களில் விற்பனை செய்வதுதான், அதன் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணம் என நாங்கள் கருதுகிறோம். இதுதவிர நல்ல மைலேஜ், டிரைவிங் ரேஞ்ச், சிறப்பான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன், சரியான விலை நிர்ணயமும் வெற்றிக்கான முக்கியமான காரணங்கள் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2024, 23:54 [IST]
English summary
Tata punch sales report august 2024 8 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+