27 கிமீ மைலேஜ் தருது! இந்தியாலயே அதிகமா சேல்ஸ் ஆகற காரோட விலை இவ்ளோதானா! அதான் மாருதியையே பின்னாடி தள்ளீருச்சு

இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில் (ஜனவரி-ஜூன்), மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாடா பன்ச் (Tata Punch) முதல் இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டின் முதல் அரையாண்டில், 1,10,308 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டின் முதல் அரையாண்டில் வெறும் 67,117 ஆக மட்டுமே இருந்தது. இது 64 சதவீத வளர்ச்சி ஆகும்.

ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என 2 வெர்ஷன்களிலும் கிடைப்பதுதான், டாடா பன்ச் காரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு பின்னால் உள்ள முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஐசி இன்ஜின் மாடலின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.

Tata Punch EV

அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக உள்ளது.

இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். டாடா பன்ச் ஐசி இன்ஜின் மாடல் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல்/மேனுவல் மாடல் ஒரு லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் 1.2 லிட்டர் பெட்ரோல்/ஏஎம்டி மாடல் ஒரு லிட்டருக்கு 18.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக இருக்கிறது.

Tata Punch Seat

இவை எல்லாவற்றையும் விட, டாடா பன்ச் காரின் 1.2 லிட்டர் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது.

மறுபக்கம் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் காரின் 25 kWh பேட்டரி மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் எனவும், 35 kWh பேட்டரி மாடலின் டிரைவிங் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ்/ரேஞ்ச் ஆகிய அம்சங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து, டாடா பன்ச் காரை இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மாற்றியுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் கார், இந்திய சந்தையில் மிக பிரம்மாண்டமான வெற்றியை பெற்றுள்ளது. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) அதை உறுதி செய்கிறது. டாடா பன்ச் காரில் வழங்கப்படும் அதிநவீன வசதிகளும், அதன் வெற்றிக்கு பின்னால் உள்ள முக்கியமான காரணங்களில் ஒன்று என நாங்கள் கருதுகிறோம்.

இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) எலெக்ட்ரிக் கார் ஆகிய மாடல்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா பன்ச் திகழ்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடிய விரைவில் பன்ச் காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வருகைக்கு பின், டாடா பன்ச் காரின் விற்பனை மேலும் உயரலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, August 5, 2024, 23:54 [IST]
English summary
Tata punch sales report h1 2024 64 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+