27 கிமீ மைலேஜை வாரி வழங்க கூடிய காரோட விலையை கேட்டதும் ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்... உண்மையாவே இவ்ளோதானா!
இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் (Top 10 Cars) பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் எதாவது ஒரு தயாரிப்புதான் முதலிடத்தை பிடித்திருக்கும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், உடனடியாக உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள். ஏனெனில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பன்ச் (Tata Punch) கார்தான், இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 18,238 பன்ச் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 10,990 ஆக மட்டுமே இருந்தது.

இது 66 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியின் மூலம், இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார் என்ற மகுடத்தை டாடா பன்ச் மைக்ரோ எஸ்யூவி கார் தட்டி சென்றுள்ளது.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டாடா பன்ச் காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 1.2 லிட்டர் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 88 பிஎஸ் மற்றும் 115 என்எம் ஆக உள்ளது. இதன் பெட்ரோல் வேரியண்ட்களில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மறுபக்கம் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது, பவர் அவுட்புட் 73.5 பிஎஸ் மற்றும் 103 என்எம் ஆக மட்டுமே இருக்கும். இதன் சிஎன்ஜி வேரியண்ட்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
பவர் அவுட்புட் குறைவு மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை என்றாலும் கூட, சிஎன்ஜி வேரியண்ட்கள் சிறப்பான மைலேஜ் வழங்க கூடியவை. பன்ச் காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டாடா நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.09 கிலோ மீட்டர் மைலேஜையும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 18.80 கிலோ மீட்டர் மைலேஜையும் மட்டுமே வழங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் தவிர, டாடா பன்ச் காரில் எலெக்ட்ரிக் வெர்ஷனும் கிடைக்கிறது.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாய் ஆகவும் மட்டுமே உள்ளது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனை செய்யப்படுவதுதான், டாடா பன்ச் காரின் மிக முக்கியமான பலமாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா பன்ச் கார், நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகவும் ஏற்றதாக திகழ்கிறது. இது உருவத்தில் சிறியது என்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கும் கூட ஏற்றதாக உள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) காருக்கு, இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








