வெறும் 6 லட்ச ரூபாய்க்கு இந்த காரை குடுக்கறாங்களா! திருவிழா மாதிரி ஷோரூம்ல கூட்டம் அலை மோதிகிட்டு இருக்கு!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டாடா பன்ச் (Tata Punch) காரின் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டாடா பன்ச் கார் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனையில் 7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. ஏனெனில் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 14,383 பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 15,435 ஆக உயர்ந்துள்ளது.
இது 7 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த வளர்ச்சியின் மூலம் இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி ரக கார்களின் (Top-10 SUV Cars) பட்டியலில் டாடா பன்ச் 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) ஆகும். ஆனால் நூலிழையில்தான் டாடா பன்ச் கார் முதலிடத்தை இழந்துள்ளது. அதாவது நடப்பு 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை 15,452 ஆக மட்டுமே உள்ளது.
ஆனால் இதே மாதத்தில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை 15,435 ஆகும். அதாவது வெறும் 17 கார்கள் வித்தியாசத்தில் டாடா பன்ச் முதலிடத்தை இழந்துள்ளது. எனவே வரும் மாதங்களிலும் இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தையில் டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய 2 கார்களுக்கு இடையேயான போட்டி கடுமையாக இருக்கலாம்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் கார் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய 2 வெர்ஷன்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது டாடா பன்ச் காரின் மிகப்பெரிய பலம். ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா கார் ஐசி இன்ஜின் வெர்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு கொண்டுள்ளது.
எனினும் இந்த குறை இன்னும் ஒரு சில மாதங்களில், அனேகமாக வரும் ஜனவரி மாதத்திலேயே நிவர்த்தி செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், ஹூண்டாய் க்ரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.
எனவே இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா இவி விற்பனையில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e Vitara) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலை (ஆரம்ப விலை வெறும் 6.13 லட்ச ரூபாய் மட்டுமே), அதிக பாதுகாப்பு (குளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளது) போன்றவை எல்லாம் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








