பஞ்ச் காரில் அதிரடி மாற்றத்தை செய்த டாடா! இதை யாருமே எதிர்பார்க்கல!
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை வேரியண்ட்களை அப்டேட் செய்து வாடிக்கையாளர்கள் வசதிக்காக புதுமையான சில வேரியன்ட்களை அறிமுகப்படுத்தி சில வேரியன்ட்களை நீக்கி தனது பட்டியலை புதுப்பித்துள்ளது. இதன்படி தற்போது டாடா பஞ்ச் கார் என்னென்ன வேரியன்ட்களில் எல்லாம் கிடைக்கிறது. அதன் விலைகள் என்ன என்ற விரிவான விவரங்களை தான் நாம் இங்கே காண போகிறோம்.
டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரையை கடந்த 2021-ம் ஆண்டு தான் அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்தியது முதல் இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது கடந்த ஜனவரி மாதம் வரை இந்த கார் மிகச் சிறப்பான விற்பனையில் இருக்கிறது டாடா நெக்ஸான் காரையே முந்தி அதிக எண்ணிக்கையிலான பஞ்ச் கார்கள் விற்பனையாகி வருகின்றன. தற்போது டாடா நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் காராக இந்த பஞ்ச் கார் தான் இருக்கிறது.

சமீபத்தில் தான் டாடா பஞ்ச் கார் 3 லட்சம் கார்களை தயாரித்து டாடா நிறுவனத்திற்கு மிக முக்கியமான மைல் கல்லை பெற்று தந்தது. தொடர்ந்து ஸ்டார்ட் ஆகும் சிறப்பான விற்பனையில் இருக்கும் நிலையில் அதன் வேரியன்ட்கள் மாற்றப்பட்டு அதன் பட்டியலை டாடா நிறுவனம் புதுப்பித்துள்ளது. அதன்படி மார்க்கெட்டில் பெரிய அளவு வரவேற்பு இல்லாத வேரியன்ட்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன. மேலும் மார்க்கெட்டில் மக்களுக்கு தேவையான சில வேரியன்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
டாடா பஞ்ச் கேமோவில் உள்ள எட்டு வேரியன்டுகள் நீக்கப்பட்டுள்ளன . அதன்படி கேமோ அட்வெஞ்ச்சர் எம்டி, கேமோ அட்வெஞ்சர் ரிதம் எம்டி, கேமோ அட்வெஞ்சர் ஏஎம்டி, கேமோ அக்கம்பிளிஷ் எம்டி, கேமோ அக்கம்பிளிஷ் ரிதம் எம்டி, கேமோ அக்கம்பிளிஷ் டேஸில் எம்டி, கேமோ அக்கம்ப்ளிஷ் ஏஎம்டி, கேமோ அக்கம்ப்ளீஷ் ஏஎம்டி, பஞ்ச் கிரியேட்டிவ் டுயல் டோன் கிரியேட்டிவ் மற்றம் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் எம்டி டூயல் டோன் ஆகிய வேரியன்ட்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

டாடா நிறுவனத்தின் கேமோ வேரியன்டான பச்சை நிற வேரியன்ட் ஹாரியர் மற்றும் சஃபாரி காரில் பார்க்க சிறப்பான லுக்கை தருகிறது. ஆனால் இது சிறிய ரக பஞ்ச் கார் போன்ற காரில் இந்த கலர் பெரிய அளவில் நல்ல லுக்கை தரவில்லை. இதனால் பலருக்கும் இந்த கலரில் பெரிய அளவு விருப்பமில்லை.
இந்த வேரியின்ட் கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் இந்த வேரியன்ட்களை முற்றிலுமாக டாடா நிறுவனம் நீக்கியுள்ளது.
புதிய பஞ்ச் காரின் வேரியண்டாக கிரியேட்டிவ் எம்டி கிரியேட்டிவ் எம்டி மற்றும் கிரியேட்டிவ் ஏஎம்டி ஆகிய கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்ச் கிரியேட்டிவ் எம்டி காரை பொறுத்தவரை ரூபாய் 8.85 லட்சம் என்ற விலையிலும் கிரியேட்டிவ் பிளாக்ஷிப் மற்றும் கிரியேட்டிவ் ஏஎம்டி காரின் விலை பொருத்தவரை முறையே ரூபாய் 9.60 மற்றும் 9.45 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

டாடடா பஞ்ச் காரை பொறுத்தவரை கிரியேட்டிவ் வேரியண்ட் தான் அந்த காரின் டாப் வேரியன்டாக இருக்கிறது. இது ப்யூர், அட்வெஞ்சர், அக்கம்பளிஷ் மேலாக இந்த வேரியன்ட் இருக்கிறது. இந்த காரில் ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக இதில் எல்இடி டிஆர்எல், புரொஜெக்டர் ஹெட்லைட், டைமண்ட் கட் அலாய் வீல், உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.
மேலும் இந்த காரில் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட், ரெயின் சென்சிங் வைப்பர், ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம், உட்பக்கம் 7இன்ச் கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆட்டோமேட்டிக் டெம்பரேச்சர் கண்ட்ரோல், கூல்டு கிளவ் பாக்ஸ், பின்பக்க சீன் சீட்டிற்கான ஆம்ரெஸ்ட். உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்தை பொருத்தவரை இந்த காரில் டயர் பிரஷர் மானிட்டரின் சிஸ்டம் இருக்கிறது. இதுபோக லெதர்விராப் செய்யப்பட்ட ஸ்டேரிங் வீல், கியர்நாப் உள்ளது.

கிரியேட்டிவ் பிளாக்ஷிப் வேரியண்டில் சன்ரூஃப் பேக் ஆப்ஷனும் இருக்கிறது. இது சன்ருப்பை வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் கண்ட்ரோல் செய்யலாம். இந்த காரில் ஐஆர்ஏ கனெக்டர் தொழில்நுட்பம் இருக்கிறது. இந்த பஞ்ச் கார் தற்போது விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. பேஸிக் ப்யூர் எம்டி வேரியண்டில் ரூபாய் 13000 விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் சிஎன்ஜி வேரியண்டில் ரூபாய் 17,000 விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கழுத்து: இந்தியாவில் டாடா பஞ்ச் காருக்கு என்று தனி மதிப்பு இருக்கிறது. இந்தியாவில் சிறப்பாக இந்த கார் விற்பனையாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் இன்னும் விற்பனையை ஈர்க்கவும் மக்கள் விரும்பாத வேரியன்ட்களை புறந்தள்ளவும், இந்த பட்டியல் மாற்றத்தை டாடா நிறுவனம் செய்துள்ளது. இது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









