ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?

டாடா நிறுவனத்தின் பஞ்ச் காருக்கான புக்கிங் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்த காரின் காத்திருப்பு காலமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் இந்த காரை புக் செய்த வாடிக்கையாளர்கள் பலர் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை பஞ்ச் கார்தான் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. டாடா நிறுவனம் என்றாலே பாதுகாப்பு என்று நமக்கு தெரியும். அதில் குறைந்த விலையில் பாதுகாப்பான காராக இந்த பஞ்ச் கார் இருக்கிறது. இதனால் மார்க்கெட்டில் இந்த காருக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. ஏகப்பட்ட மக்கள் இந்த காரை புக் செய்து வருகிறார்கள்.

இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலமும் அதிகரித்துள்ளது. இதனால் இந்த காரை தற்போது வாங்க வேண்டும் என புக் செய்பவர்கள் நீண்ட காலம் இந்த காலம் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நீங்கள் இந்த டாடா பஞ்ச் எஸ்யூவி காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் உங்களுக்கு பயனுள்ளதாக சில தகவல்களை நாங்கள் இங்கே தரப் போகிறோம்.

டாடா பஞ்ச் காரை பொருத்தவரை மொத்தம் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி பெட்ரோல் மேனுவல், பெட்ரோல் ஏஎம்டி மற்றும் சிஎன்ஜி ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இதில் பெட்ரோல் மேனுவல் மற்றும் பெட்ரோல் ஏஎம்டி ஆகிய வேரியன்ட் தான் இருப்பதிலேயே குறைவான காத்திருப்பு காலம் கொண்டதாக இருக்கிறது. இதன்படி இந்த காரை தற்போது புக் செய்தால் 4-6 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறது.

அடுத்ததாக சிஎன்ஜி வேரியண்ட் தான் இருப்பதிலேயே அதிக காத்திருப்பு காலம் கொண்டதாக இருக்கிறது இது 6- 8 வாரங்கள் வரை இந்த காருக்கான காத்திருப்பு காலம் இருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 6.13 லட்சம் முதல் ரூபாய் 10.20 லட்சம் விலையில் விற்பனையாகி வருகிறது. பட்ஜெட் குறைவாக இருப்பதால் பலர் இந்த கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

நம் முன்னரே சொன்னதுபடி இந்த காரில் மூன்று விதமான இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி 1.2லிட்டர் பெட்ரோல் மேனுவல், 1.2 லிட்டர் பெட்ரோல் ஏஎம்டி, ஆகியவை உள்ளன. இதுபோக அதே 1.2 லிட்டர் இன்ஜினில் சிஎன்ஜி மேனுவல் ஆப்ஷனும் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே இன்ஜினில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனும் அதே நேரத்தில் கியர் பாக்ஸில் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு இந்த கார் விற்பனைக்கு வருகிறது.

இந்த கார் மார்க்கெட்டில் உள்ள ஹூண்டாய் எக்ஸென்ட் ,சிட்ரோன் சி3, நிஸான் மேக்னெட், ரெனால்ட் கைகர், மாருதி இக்னீஷ் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது. இன்றும் மாதம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான இந்த கார்களை டாடா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதனால் சாலை முழுவதும் இந்த கார்களை அதிகம் காண முடியும். ஒவ்வொரு மாதமும் இதன் விற்பனை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த காருக்கான காத்திருப்பு காலம் என்பது சராசரியான காத்திருப்பு காலத்தை தான் நாங்கள் வழங்கி உள்ளோம். நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட், நீங்கள் தேர்வு செய்யும் கலர், எந்த ஊரில் தேர்வு செய்கிறீர்கள், எந்த ஷோரூமில் நீங்கள் புக்கிங் செய்கிறீர்கள், என்பதை பொறுத்து காத்திருப்புகாலம் என்பது மாறுபடும். சிலருக்கு விரைவாகவே இது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு குறிப்பிட்ட காலத்தை விட அதிக காலம் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.

டாடா பஞ்ச் கார் மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த காருக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனம் எக்ஸ்டர் என்ற காரை களம் இறக்கி இருந்தாலும் தொடர்ந்து டாடா நிறுவனத்தின் காருக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. முக்கியமாக இதன் பாதுகாப்பு அம்சம் தான் இந்த காரின் விற்பனைக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்தியர்கள் மத்தியில் தற்போது பாதுகாப்பான கார்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது மிடில் கிளாஸ் மக்களுக்கு காரின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் புதிதாக கார் வாங்கும் மன நிலையில் இருக்கிறார்கள். முதல் தலைமுறையில் கார் வாங்கும் பலர் அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட காரை வாங்கி பயன்படுத்திவிட்டு புதிய காருக்கு மாறும் பலர் இந்த டாடா பஞ்ச் காரை தேர்வு செய்கிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 11:37 [IST]
English summary
Tata punch waiting period april 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X