ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!
இந்தியாவில் டாடா பஞ்ச் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டாடா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இந்த கார் இருக்கிறது. இந்த காரின் பிரபலத்திற்கு முன்னால் மற்ற போட்டி நிறுவனங்களில் கார்கள் விற்பனை எல்லாம் மந்தமாகியுள்ளது என்றே சொல்லலாம். இதன் காரணமாக இந்த காத்திருப்பு காலம் நீண்ட நாட்களாக இருக்கிறது. இது குறித்து வெளியான புதிய அப்டேட் பற்றி காணலாம் வாருங்கள்.
மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் டாடா பஞ்ச் கார் அறிமுகமானது முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இன்றளவும் இந்த கார் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை அளவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு உற்பத்தி திறனையும் டாடா நிறுவனம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னதான் அதிகரித்தாலும் மக்களின் டிமாண்டிற்கு ஏற்ப சப்ளை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இதனால் இந்த காருக்கான காத்திருப்பு காலம் என்பது அதிகமாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் தற்போது மார்ச் மாதம் புக்கிங் செய்தவர்களுக்கான காத்திருப்பு காலத்தை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மார்ச் மாதம் இந்த காரை புக் செய்தால் 6 வாரங்கள் அதாவது 42 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த காரை புக் செய்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த காத்திருப்பு காலம் என்பது வேரியன்ட், கலர் மற்றும் நீங்கள் காரை வாங்கும் ஊர் மற்றும் டீலரை பொருத்து மாறுபட வாய்ப்புள்ளது. 6 வாரங்கள் என்பது அதிகபட்ச காலம்தான் அதற்கு முன்னதாகவே கார்கள் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இருந்தாலும் ஆயிரக்கணக்கில் இந்த கார்கள் மாதம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருவதால், பலர் இந்த காரை புக் செய்து தங்கள் விரும்பிய காரை வாங்க காத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தான் டாடா நிறுவனம் புதிதாக மூன்று வேரியன்ட்களை டாடா பஞ்ச் காரில் அறிமுகப்படுத்தி ஏற்கனவே விற்பனையாகி வந்த 10 வேரியண்ட்களை நீக்கி உள்ளது. நீக்கப்பட்ட 10 வேரியன்ட்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்தது. 10 வேரியண்ட்களில் 8 வேரியன்ட் கேமோ வேரியன்ட்கள் ஆகும்.
தற்போது டாடா பஞ்ச் காரில் கோமோ வேரியன்ட்களை யாராலும் வாங்க முடியாது. இதுபோக பஞ்ச் கிரியேட்டிவ் டூயல் டோன் மற்றும் கிரியேட்டிவ் ஃபிளாக்ஷிப் மேனுவல் டூயல் டோன் ஆகிய வேரியன்ட்களையும் டாடா நிறுவனம் நீக்கிவிட்டது. இந்த டாடா பஞ்ச் காரின் விலையை பொறுத்த வரை ரூ6.13 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

டாடா பஞ்ச் காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 86 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 18.97 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரின் உட்புறத்தில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோமேட்டிக் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட் லைட், கனெக்டெட் கார் தொழில்நுட்பம், க்ரூஸ் கண்ட்ரோல், உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த காரின் சிறப்பு அம்சமே இந்த காரின் பாதுகாப்பு ரேட்டிங் தான். இந்த கார் குளோபல் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட காராக இருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் இந்த காரை வாங்க மக்கள் புக் செய்து வரும் நிலையில், தற்போது புக் செய்தவர்களுக்கு ஆறு மாதம் அதாவது இந்த மார்ச் மாதம் புக் செய்தவர்களுக்கு மே மாதம் தான் கார் கிடைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புக்கிங் செய்தவர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள். டாடா நிறுவனம் தயாரிப்பை அதிகப்படுத்தி காத்திருப்பு காலத்தை குறைத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா போன்ற நிறுவனங்கள் பஞ்ச் காரை அறிமுகப்படுத்தியதில் இருந்து நல்ல விற்பனையில் இருப்பதால் அதன் தயாரிப்பு திறனை அதிகப்படுத்தி இருக்க வேண்டும். தற்போது எதிர்பார்ப்பையும் தாண்டி மக்கள் அதிகமாக இந்த காரை வாங்கி வருவதால், அந்நிறுவனம் தயாரிப்பு திறனை அதிகரிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. விரைவில் இந்த காருக்கான காத்திருப்பு காலம் குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









