பெரிய பெரிய கோடீஸ்வரங்களே இந்த விலை குறைவான காருக்காக ஷோரூம் வாசல்ல தவம் கெடக்கறாங்க! ஏன்னா அது டாடா தயாரிப்பு

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டாடா சஃபாரி (Tata Safari). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த டாடா சஃபாரி காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒட்டுமொத்தமாக 1,951 சஃபாரி கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 1,019 ஆக மட்டுமே இருந்தது.

இது 91 சதவீத வளர்ச்சி ஆகும். இது மிக பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இந்திய சந்தையில் டாடா சஃபாரி கார், 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. எனவே பெரிய குடும்பங்களுக்கு ஏற்ற எஸ்யூவி ரக காராக, டாடா சஃபாரி திகழ்கிறது.

Tata Safari

செயல்திறனை பொறுத்தவரையில் சக்தி வாய்ந்த, 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆப்ஷனை டாடா சஃபாரி கார் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 170 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாடா சஃபாரி காரில், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உள்ளிட்ட வசதிகள் (Features) எல்லாம் கொடுக்கப்பட்டுள்ளன.

Motilal Oswal With His Tata Safari

அத்துடன் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 7 ஏர்பேக்குகள், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) உள்ளிட்ட வசதிகளும், டாடா சஃபாரி காரில் வழங்கப்படுகின்றன.

பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) என 2 மோதல் சோதனைகளிலும், டாடா சஃபாரி கார் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5-star Safety Rating) பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது இந்த காரின் விற்பனை எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப விலை 15.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 26.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் (MG Hector Plus), ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களுக்கு எல்லாம், மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா சஃபாரி திகழ்கிறது. ஆனால் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) ஆப்ஷன் இல்லை என்பது இந்த காரின் ஒரு குறையாகும்.

ஆனால் கூடிய விரைவில் இந்த குறை நிவர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், டாடா சஃபாரி காரில் வரும் 2025ம் ஆண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டால், இந்த காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும்.

தற்போது பெரும் கோடீஸ்வரர்கள் பலரும் கூட, டாடா சஃபாரி காரை வாங்கி வருகின்றனர். இதற்கு மோதிலால் ஓஸ்வால் (Motilal Oswal) ஒரு உதாரணம். ஒரு இந்திய நிறுவனத்தின் தரமான தயாரிப்பு என்பதை மேற்கொள்காட்டிதான், அவர் டாடா சஃபாரி காரை வாங்கினார். பெரும் கோடீஸ்வரர்களை பொறுத்தவரையில் சாதாரண காராக இருந்தாலும் கூட, வரும் காலங்களில் இன்னும் நிறைய பிரபலங்கள் டாடா சஃபாரி காரை வாங்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2024, 22:27 [IST]
English summary
Tata safari sales report august 2024 91 per cent growth
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+