விலை குறைவான எலெக்ட்ரிக் காருடன் ஆட்டத்தை ஆரம்பித்த டாடா... மாருதியே அண்ணாந்து பாக்க போகுது...
ஜனவரி மாதம் முடிவடைந்து பிப்ரவரி மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், அனைத்து விதங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 47,987 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 53,633 ஆக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சி ஆகும்.

அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 302 கார்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 400 ஆக உயர்ந்துள்ளது. இது 32 சதவீத வளர்ச்சி ஆகும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி), டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 48,289 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 54,033 ஆக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை மட்டும் தனியாக எடுத்து கொண்டாலும் கூட, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 4,133 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 6,979 ஆக உயர்ந்துள்ளது. இது 69 சதவீத வளர்ச்சி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த சிறப்பான வளர்ச்சிக்கு டாடா நெக்ஸான் (Tata Nexon) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகிய கார்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகின்றன. வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மேலும் உயரலாம் என்பதே எங்கள் கருத்து.
ஏனெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 10.99 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இது ஓரளவிற்கு குறைவான விலை என்பதால், டாடா பன்ச் இவி விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor)கார்களின் சிஎன்ஜி (CNG) இன்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வெகு விரைவில் வழங்கப்படவுள்ளது.
மேலும் டாடா நெக்ஸான் காரின் சிஎன்ஜி இன்ஜின் மாடலும் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுமட்டுமல்லாது டாடா கர்வ் (Tata Curvv) போன்ற புத்தம் புதிய கார்களும் விற்பனைக்கு களமிறக்கப்படவுள்ளன. எனவே இந்திய சந்தையில் எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கொடி உயர பறக்க போகிறது என்பது உறுதி.


Click it and Unblock the Notifications








