ஊட்டி சாக்லேட் ஃபேக்டரிகளையே மிஞ்சிய டாடா! சாக்லேட்டை பொட்டலம் கட்டி அனுப்புறத போல கார்களை தயாரிச்சு அனுப்புது

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) கார் உற்பத்தியில் சாக்லேட் ஃபேக்டரிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இருக்கின்றது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கார் உற்பத்தி ஆலையில் குஜராத்தில் உள்ள சனந்த் ஆலையும் ஒன்றாகும். இந்த ஆலையிலேயே வரலாற்று சிறப்புமிக்க சாதனையை டாடா மோட்டார்ஸ் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tata 1 millionth car

கார் உற்பத்தியிலேயே அது புதிய சாதனை மைல்கல்லை எட்டி இருக்கின்றது. ஒரு மில்லியனா (10 லட்சமா)-வது கார் யூனிட்டை உற்பத்தி செய்து டாடா நிறுவனம் வெளியேற்றி இருக்கின்றது. இந்த மாபெரும் உற்பத்தி எண்ணிக்கையை டாடா எட்டியிருப்பது டாடா கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்த எண்ணிக்கையானது டாடா மோட்டார்ஸ் எந்த அளவிற்கு கமிட்மென்ட் உடன் இந்தியாவில் செயலாற்றி வருகின்றது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. 2010 ஆண்டிலேயே இந்த ஆலையை டாடா மோட்டார்ஸ் விரிவாக்கம் செய்தது. 1100 ஏக்கர் பரப்பளவுக் கொண்டதே சனந்த் ஆலை ஆகும்.

இங்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் என 6 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையில் டாடா நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்கள் பல தயாரிக்கப்படுகின்றன. அந்தவகையில், டியாகோ, டியாகோ ஏஎம்டி, டியாகோ.இவி (எலெக்ட்ரிக் கார்), டிகோர் ஐசிஎன்ஜி, டிகோர், டிகோர் ஏஎம்டி, டிகோர் இவி (எலெக்ட்ரிக் கார்), டிகோர் ஐசிஎன்ஜி மற்றும் எக்ஸ்பிரஸ்-டி இவி ஆகிய கார் மாடல்களையே சனந்த் ஆலையில் வைத்து டாடா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

பிரஸ் லைன், வெல்டிங் ஷாப், பெயிண்ட் ஷாப், அசெம்பிளி லைன் மற்றும் பவர்டிரெயின் ஷாப் என அனைத்து முக்கிய பிரிவுகளையும் சனந்த் ஆலைக் கொண்டிருக்கின்றது. இந்த ஆலையின் வாயிலாக பெரும் வேலை வாய்ப்பை மட்டுமே டாடா மோட்டார்ஸ் வழங்கிக் கொண்டிருக்கவில்லை, அது, அதனைச் சுற்றியிருக்கும் 68 கிராமங்களையும் தத்தெடுத்து இருக்கின்றது.

இதனால்தான் டாடா மோட்டார்ஸின் இந்த வெற்றியை இந்தியர்கள் பலர் தங்களின் வெற்றியாக பார்க்கின்றனர். மேலும், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து அந்நிறுவனத்தின் (டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு மற்றும் டாடா பயணிகள் வாகன மின்சார வாகன பிரிவின்) நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா கூறியதாவது, "சனந்த் ஆலையில் இருந்து 1 மில்லியன் காரை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். " என்றார்.

மேலும், "இந்த மைல்கல் நுகர்வோர் மத்தியில் எங்கள் தயாரிப்புகளுக்கு நிலவிக் கொண்டிருக்கும் பிரபலத்தை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இருக்கின்றது" என்றும் அவர் கூறினார். இதுதவிர, சந்தையில் டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளுக்கு நிலவிக் கொண்டிருக்கும் தேவைகளை துள்ளியமாக எடுத்துக் காட்டும் வகையிலும் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு சாதனை இருப்பதை நம்மால் உணர முடிகின்றது.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் டியாகோ, டிகோர், நெக்ஸான், பஞ்ச், ஹாரியர், சஃபாரி உள்ளிட்ட கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் விரைவில் புதுமுக கார் மாடல் கர்வ் மற்றும் அவின்யா போன்றவற்றை இணைக்க இருக்கின்றது. வெகு விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக இந்த புதுமுக டாடா கார்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே சனந்த் ஆலையின் இமாலய உற்பத்தி திறன் அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக பஞ்ச் மற்றும் நெக்ஸான் ஆகியவை இருக்கின்றன. இரண்டும் ஐசிஇ மற்றும் எலெக்ட்ரிக் என இரண்டு அவதாரங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 9, 2024, 17:39 [IST]
English summary
Tata set a new record in car production at sanand plant
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+