அரபு நாடுகளின் அடி மடியிலேயே கை வைத்த டாடா! இததான் இந்தியாவே எதிர்பாத்துச்சு! சினிமாவை விஞ்சும் மாஸ் சம்பவம்!
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனி சாம்ராஜ்யமே நடத்தி கொண்டுள்ளது. இந்த செக்மெண்ட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட் ஷேர் (Market Share) 71 சதவீதம் ஆகும். அதாவது 100 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 71 எலெக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையதாக உள்ளது.
டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV), டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் இவி (Tata Tigor EV) என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் ஒட்டுமொத்தமாக 4 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை அனைத்திற்குமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து நடப்பு 2024ம் ஆண்டின் இறுதிக்குள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேற்கொண்டு 2 அல்லது 3 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை முன்னிட்டு இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் (Charging Stations) எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஷெல் (Shell) நிறுவனத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது கை கோர்த்துள்ளது.
இது இங்கிலாந்தை சேர்ந்த பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காகவே டாடா மோட்டார்ஸ் மற்றும் ஷெல் ஆகிய 2 நிறுவனங்களும் தற்போது கை கோர்த்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்தாகி விட்டது.

இந்த கூட்டணியின் மூலம், எலெக்ட்ரிக் கார்களை வைத்துள்ள நபர்களுக்கு, பேட்டரியை சார்ஜ் செய்வதில் உள்ள பிரச்னைகள் நீங்கும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ்-ஷெல் கூட்டணியில் இந்தியா முழுக்க எத்தனை சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளது? என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் அமைக்கப்படவுள்ள இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள், எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்? என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. மத்திய அரசின் தரவுகளின்படி பார்த்தால், இந்தியாவில் தற்போதைய நிலையில் 12,146 பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில், டாடா பவர் (Tata Power) நிறுவனத்துடையது மட்டும் சுமார் 8 ஆயிரம் ஆகும். ஷெல் நிறுவனத்திற்கு முன்னதாக ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) நிறுவனத்துடனும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூட்டணி அமைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியின் மூலம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளிலும், சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற பலரும் தயங்கி கொண்டுள்ளனர். ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கைகள், அந்த தயக்கத்தை உடைப்பது போல் உள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், வரும் காலங்களில் நிறைய பேர் எலெக்ட்ரிக் வாகனங்களை துணிச்சலாக வாங்குவார்கள் என்பது எங்கள் கருத்து.
இது கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் லட்சியத்திற்கு உதவி செய்வதாகவும் இருக்கும். பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அத்துடன் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்காக பல லட்சம் கோடி ரூபாய்களை செலவிட வேண்டியுள்ளது.
இது பொருளாதாரத்தில் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைய வேண்டும் என்று மத்திய அரசு வெளிப்படையாகவே தெரிவிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள், மத்திய அரசின் திட்டங்களுக்கும் உதவியாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
உலகிலேயே கச்சா எண்ணெய்யை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து, கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தால், அது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் பெரும்பாலான நாடுகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








