இன்னோவா எல்லாம் ஒரம் போ! இந்தியாவே எதிர்பார்த்த டாடா காரில் அப்படி என்ன இருக்கிறது?
டாடா மோட்டார்ஸ், கிளாசிக் வடிவமைப்பை நவீன அம்சங்களுடன் இணைக்கும் ஒரு வாகனமான டாடா சியரா காரை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. சியரா கார் இன்டர்னல் கம்பஷன் என்ஜின் (ICE) மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் (EV) ஆகிய இரு வகைகளிலும் கிடைக்கும். EV எடிசனிற்கு ICE மாடலை விட முன்னதாக அறிமுகமாகும் வாய்ப்புள்ள நிலையில், இந்த நிறுவனம் 2025ம் ஆண்டு இறுதிக்குள் சியராவை வெளியிட திட்டமிட்டுள்ளது.
நிதி ஆய்வாளர்களுடனான கூட்டத்தில், டாடா மோட்டார்ஸ், உற்பத்திக்குத் தயாரான சியாராவின் முன்னோட்டம் 2025ம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நேரம் இந்தியாவின் பண்டிகை காலத்துடன் ஒத்துப்போகிறது, இதனால் மக்கள் மத்தியில் ஆர்வம் மற்றும் இந்த காருக்கான முன்பதிவுகள் அதிகரிக்கக்கூடும். சியராவின் வடிவமைப்பு அதன் ஒரிஜினல் மாடலின் அம்சங்களை நவீன அழகியலுடன் இணைக்கும்.

புதிய சியரா கார், பெரிய பின்புற ஜன்னல்கள் மற்றும் பெரிய B பில்லர் போன்ற சில ஐகானிக் அம்சங்களைத் தக்கவைத்து, அவற்றை நவீன சுவைகளுக்கு ஏற்ப புதுப்பித்துள்ளது. பின்புற ஜன்னல்கள் இப்போது கருப்பு பிளாஸ்டிக் ஃபினிஷ் உடன் ஒரு ராப்-அரவுண்ட் அம்சங்களை பெற்றுள்ளன. அதன் முன்னோடியின் நிலையான ஜன்னல்களைப் போலல்லாமல், புதிய மாடல் நவீன SUVகளுக்கு பொதுவான நிலையான ஜன்னல்களை வழங்குகிறது.
கூடுதலாக, அசல் 3 டோர் வடிவமைப்பு 5 டோர் அமைப்பால் மாற்றப்பட்டுள்ளது. வடிவமைப்பு டாடாவின் வரவிருக்கும் எலெக்ட்ரிக் மாடல்களின் அம்சங்களை உள்ளடக்கியது, அவற்றில் முழு அகல LED லைட் ஸ்டிரிப்கள், நேர்த்தியான முன் பக்க லைட்டுகள் மற்றும் விளையாட்டுத்தனமான இரட்டை-நிறக் கலவை அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும். கூரையின் மீது பொருத்தப்பட்ட ஒரு ஸ்பாய்லர் மற்றும் கடினமான பம்பர் அதன் பின்புற புரோஃபைலை மேம்படுத்துகின்றன.

புதிய சியாராவின் உட்பக்கம் மினிமல் மற்றும் நேர்த்தியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இரட்டை 12.3-இன்ச் ஸ்கிரீன் மற்றும் இலுமினேட் செய்யும் டாடா லோகோவுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை கொண்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்டுகள், லெதர் சீட் மற்றும் விரிவான கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் போன்ற பிற அம்சங்களும் இருக்கலாம். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு மேம்பட்ட டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பும் இதில் வழங்கப்பட்டுள்ளது.
சியாரா காருகான பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் பல்வேறுபட்டவை. EV எடிசன் சுமார் 550 கி.மீ. ரேஞ்சை வழங்கும் 45 kWh அல்லது 55 kWh பேட்டரி பேக் கொண்டிருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது DC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் என எதிர்பார்க்கலாம். இந்த காரில் சிங்கிள் மோட்டார் அமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICE எடிசன் டாடாவின் ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் உள்ளதைப் போன்ற ஒரு டீசல் இன்ஜினைப் பயன்படுத்தும். கூடுதலாக, புதிய 1.5-லிட்டர் டர்போசார்ஜ்டு நான்கு-சிலிண்டர் இன்ஜினுடன் கூடிய பெட்ரோல் எடிசனனும் அறிமுகமாகும் என பேசப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூ்வமாக எந்த வித தகவல்களும் இல்லை.
டாடா மோட்டார்ஸ் 2020 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடந்த ஆட்டோ எக்ஸ்போக்களில் நடந்ததை போல வரும் ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த புதுமைகளை வைத்து மக்களின் கவனத்தை ஈர்க்க உத்தேசித்துள்ளது. EV துறையில் விரிவாக்கம் குறித்த தங்கள் திட்டங்களை ஒட்டி EVகள் ICE மாடல்களை விட முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு Curvv போன்ற அறிமுகங்களை பிரதிபலிக்கும் வகையில் அந்நிறவனம் திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியாரா, டிரெடிஷனல் மற்றும் நவீன கார் ஆர்வலர்கள் எல்லோருக்கும் ஏற்றவாறு அதன் இயக்கவியல் மற்றும் அம்சங்களை வடிவமைத்துள்ளது. டாடா சியாரா கார் குடும்பத்துடன் ஏற்ற காராக இருக்கும் என கருதுவால் இதன் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








