பெட்ரோல் கார்களே விற்க கூடாதுனு நினைச்சிருச்சா டாடா.. லட்ச கணக்குல இ-கார்களுக்கு விலை தள்ளுபடி அறிவிச்சிருக்கு
டாடா (Tata Motors) நிறுவனத்தின் சூப்பரான எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களில் ஒன்றாக நெக்ஸான்.இவி (Nexon.EV) இருக்கின்றது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சமீபத்திலேயே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியது. இந்த காருக்கே இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் அதன் விலையை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எவ்வளவு ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது? அனைத்து வேரியண்டுகளின் விலையும் குறைக்கப்பட்டு இருக்கின்றதா? அல்லது குறிப்பிட்ட சில தேர்வுகளின் விலை மட்டுமே குறைக்கப்பட்டு இருக்கின்றதா? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது என்றால் நேரடியாக அதன் விலையில் இருந்து குறிப்பிட்ட தொகை குறைக்கப்படவில்லை. சிறப்பு தள்ளுபடி வாயிலாக டாடா மோட்டார்ஸ் அதன் நெக்ஸான்.இவி-யின் விலையைக் குறைக்கச் செய்திருக்கின்றது. ரூ. 50 ஆயிரம் தொடங்கி ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த திடீர் விலை தள்ளுபடி என்ன காரணம் என நீங்கள் கேட்கலாம். ஸ்டாக் கிளியரன்ஸ்க்காகவே தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023 இல் தயாரிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் நெக்ஸான்.இவி-யை முழுமையாக அகற்றும் பொருட்டு மாபெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இந்த தள்ளுபடியானது வேரியண்டிற்கு ஏற்ப மாறுபடுகின்றது.
அந்தவகையில், ஃபியர்லெஸ் எம்ஆர், எம்பவர்டு பிளஸ் எல்ஆர் மற்றும் எம்பவர்டு எம்ஆர் ஆகிய வேரியண்டுகளின் விலையில் ரூ. 50 ஆயிரம் தள்ளுபடியும், ஃபியர்லெஸ் பிளஸ் எம்ஆர் ஃபியர்லெஸ் பிளஸ் எம்ஆர் மற்றும் ஃபியர்லெஸ் பிளஸ் எல்ஆர் ஆகிய தேர்வுகளின் விலையில் ரூ. 65 ஆயிரமும் தள்ளுபடி வாயிலாக குறைக்கப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், ஃபியர்லெஸ் எல்ஆர் வேரியண்டின் விலையில் ரூ. 85 ஆயிரமும், டாப் ஸ்பெக் மாடலான ஃபியர்லெஸ் பிளஸ் எஸ் எல்ஆர் தேர்வின் விலையில் ரூ. 1 லட்சமும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மாபெரும் தள்ளுபடியின் காரணமாக இந்த காரை வாங்குவோரின் எண்ணிக்கு இன்னும் சில மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நெக்ஸான்.இவி தற்போது இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 30.2 kWh பேட்டரி பேக் மற்றும் 40.5 kWh பேட்டரி பேக், இவையே அவை ஆகும். இதில் முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 325 கிமீ ரேஞ்ஜையும், இரண்டாவது ஒன்று 465 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.
இரண்டும் அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ ரேஞ்ஜ் திறன் ஆகும். இத்துடன் 7.2 kW ஏசி சார்ஜரும் ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த எலெக்ட்ரிக் காருடன் வழங்கப்படுகின்றது. இதன் வாயிலாக எங்கு வைத்து வேண்டுமானாலும் டாடா நெக்ஸான்.இவி ஃபேஸ்லிஃப்டை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் நெக்ஸான்.இவி-யை போலவே ஃபேஸ்லிஃப்ட் செய்யப்படாத நெக்ஸான் இவி பிரைம் மாடலுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 1.90 லட்சம் தொடங்கி ரூ. 2.30 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்த தள்ளுபடி ஸ்டாக் உள்ள வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, நெக்ஸான் இவி மேக்ஸ் தேர்விற்கு ரூ. 2.80 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய விலை குறைப்பால் வரும் நாட்களில் டாடா நெக்ஸான்.இவி, நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் ஆகியவற்றின் விற்பனை பலமடங்கு அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பெட்ரோல் கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இந்த கார்கள் விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








