ஒரு கிலோ சிஎன்ஜி போட்டாலே இவ்ளோ தூரம் போக முடியுமா! பாதுகாப்புல மட்டுமல்ல மைலேஜிலும் ஒசத்தியான டாடா கார்கள்!

பாதுகாப்பிற்கு பெயர்போனவையே டாடா கார்கள் ஆகும். இந்த நிலையிலேயே இதன் சிஎன்ஜி கார் மாடல்களில் ஏஎம்டி வசதியை சமீபத்தில் டாடா அறிமுகப்படுத்தியது. இந்த கார் அதிகம் மைலேஜ் தரக் கூடியவை ஆகும். இதுபற்றிய விபரங்களே இப்போது வெளியாகி இருக்கின்றன. வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு கார்களை இந்தியாவில் நேற்றைய (பிப்ரவரி 9) தினம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டியாகோ சிஎன்ஜி (Tiago CNG) மற்றும் டிகோர் சிஎன்ஜி (Tigor CNG) கார் மாடல்களில் ஏஎம்டி (AMT) தேர்வையே அது நேற்றைய தினம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

Tata cng car

இந்த கார்களுக்கு இந்தியாவில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையிலேயே அதனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது, டாடா மோட்டார்ஸ். இந்தியாவில் பலதரப்பட்ட சிஎன்ஜி கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், எந்த சிஎன்ஜி கார் மாடலிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

இந்த நிலையையே டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி-யை விற்பனைக்குக் களமிறக்கியதன் வாயிலாக உடைத்தெறிந்திருக்கின்றது டாடா மோட்டார்ஸ். இந்த சிஎன்ஜி கார்களின் மைலேஜ் (Mileage) திறன் என்ன என்கிற விபரமே தற்போது வெளியாகி இருக்கின்றது. பொதுவாக சிஎன்ஜி வாகனங்கள் என்றாலே அதிகம் மைலேஜை அவை வழங்கும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் மிக அதிக மைலேஜை சிஎன்ஜி கார்கள் வழங்கும். இதையே டாடாவின் இந்த சிஎன்ஜி தேர்வுகளும் செய்கின்றன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இரண்டு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி கார்களும் ஒரே மாதிரியான மைலேஜை வழங்கும் திறனையேக் கொண்டிருக்கின்றன.

அவை ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 28.06 கிமீ வரை மைலேஜை வழங்கும். டிகோர் சிஎன்ஜி மற்றும் டியாகோ சிஎன்ஜி இரண்டு கார்களிலும் ஒரே எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. எனவேதான் மைலேஜ் திறனில் இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. இதேபோல் திறன் வெளிப்பாட்டிலும் இவை இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன.

72 பிஎச்பி மற்றும் 95 என்எம் டார்க்கையும் அது வெளியேற்றும். 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸே இரண்டிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி அறிமுகத்தைத் தொடர்ந்து சில புதிய நிறங்களையும் இந்த கார் மாடல்களில் அறிமுகம் செய்திருக்கின்றது.

அந்தவகையில், டொர்நேடோ ப்ளூ டியாகோவிலும், கிராஸ்லேண்ட் பீஜ் நிறம் டியாகோ என்ஆர்ஜி மாடலிலும் மற்றும் மீட்டியோர் ப்ரோன்ஸோ டிகோர் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. டாடா டியாகோ சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் மொத்தமாக 3 வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை எக்ஸ்டிஏ (XTA), எக்ஸ்இசட்ஏ பிளஸ் (XZA+) மற்றும் எக்ஸ்இசட்ஏ என்ஆர்ஜி (XZA NRG) ஆகும்.

இவை ரூ. 7.90 லட்சம் தொடங்கி ரூ. 8.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், டாடா டிகோர் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எக்ஸ்இசட்ஏ (XZA) மற்றும் எக்ஸ்இசட்ஏ பிளஸ் (XZA+) ஆகியவையே அவை ஆகும்.

இது ரூ. 8.85 லட்சம் தொடங்கி ரூ. 9.55 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியர்கள் மத்தியில் சின்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படாதது பெரும் குறையாக இருந்தது. இதையே டாடா தற்போது போக்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்தபடியாக நல்ல விற்பனை வரவேற்பை சிஎன்ஜி வாகனங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றன. சொல்லப்போனால் விரைவில் பெட்ரோல், டீசலையும் ஓவர்டேக் செய்யும் அளவிற்கு அவற்றிற்கு அமோக வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் மாருதி, டாடா மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் சிஎன்ஜியை களமிறக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, February 9, 2024, 22:38 [IST]
English summary
Tata tiago cng amt and tigor cng amt mileage details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+