பார்க்கவே கண்ணை பறிக்கும் புது டாடா சிஎன்ஜி கார்!! ஷோரூம்களில் இனி பார்க்கலாம்... ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில்!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் புதிய 2024 டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி வேரியண்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், இந்த புதிய டாடா சிஎன்ஜி காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகியை போலவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு மாற்றாக, சிஎன்ஜி கார்களில் சமீப காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில், அடுத்ததாக டியாகோ ஹேட்ச்பேக் காரின் புதிய சிஎன்ஜி வெர்சன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

tata tiago cng amt arrived

இந்தியாவில் விற்பனையில் உள்ள மற்ற சிஎன்ஜி கார்களை காட்டிலும் டியாகோ சிஎன்ஜி கார் ஸ்பெஷல் ஆனது ஆகும். ஏனெனில், இந்தியாவின் முதல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்ட சிஎன்ஜி காராக டியாகோ சிஎன்ஜி விளங்கவுள்ளது. இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனாக ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்த புதிய டாடா சிஎன்ஜி ஏஎம்டி கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. அவ்வாறு ஷோரூமுக்கு வந்த டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி கார் ஒன்றின் வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. கடாரியா கேரேஜ் என்கிற டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து வெளியாகி உள்ள இந்த வீடியோவில், கவர்ச்சிக்கரமான நீல நிறத்தில் டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி கார் உள்ளது.

tata tiago cng amt arrived

டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி காரை போன்று, டாடா டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி காரும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த இரு டாடா சிஎன்ஜி கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த கார்களின் அறிமுகத்தை மிக விரைவில் வரும் நாட்களில் எதிர்பார்க்கிறோம். அதாவது, அறிமுகத்தின் போதுதான் இந்த சிஎன்ஜி கார்களின் விலைகள் அறிவிக்கப்படும்.

டியாகோ சிஎன்ஜி ஏஎம்டி காரை பொறுத்தவரையில், எக்ஸ்டிஏ சிஎன்ஜி, எக்ஸ்.இசட்.ஏ+ சிஎன்ஜி மற்றும் எக்ஸ்.இசட்.ஏ என்.ஆர்.ஜி என்கிற 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதுவே, டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி கார் எக்ஸ்.இசட்.ஏ சிஎன்ஜி மற்றும் எக்ஸ்.இசட்.ஏ+ சிஎன்ஜி என்கிற 2 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

tata tiago cng amt arrived

தற்சமயம், டியாகோ மற்றும் டிகோர் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே பெட்ரோல் என்ஜின் தான் இந்த டாடா கார்களின் புதிய சிஎன்ஜி வெர்சன்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்களில் இந்த என்ஜின் சற்று குறைவாக 73.5 எச்பி மற்றும் 95 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றலாகும். புதிய ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இதனை காட்டிலும் சற்று குறைவான ஆற்றலையே இந்த என்ஜின் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.6.55 லட்சத்திலும், டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.7.80 லட்சத்திலும் எதிர்பார்க்கிறோம்.

tata tiago cng amt arrived

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி கார் நிறுவனம் தனது புதிய சிஎன்ஜி கார்களை அறிமுகம் செய்கிறது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவிலும் டியாகோ சிஎன்ஜி காரின் தோற்றம் அருமையாக உள்ளதை காண முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 19:17 [IST]
English summary
Tata tiago cng automatic car arrived dealership showrooms
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X