சிங்கிள் சார்ஜில் 315 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! தரமான சம்பவத்தை செய்த டாடா மோட்டார்ஸ்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ இவி (Tata Tiago EV). இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பல்வேறு புதிய வசதிகளை கூடுதலாக வழங்கியுள்ளது.
இதன்படி டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் XZ+ Tech Lux Long Range வேரியண்ட்டில், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர XZ+ Tech Lux Long Range மற்றும் XZ+ Long Range வேரியண்ட்களில், முன் இருக்கை பயணிகளுக்கு, 45W டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே டாடா டியாகோ இவி அதிநவீன வசதிகள் நிரம்பிய எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகதான் உள்ளது. இதில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமான ஒன்றாகும். இதுதவிர கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்படுகின்றன.
அத்துடன் மல்டி-லெவல் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் மற்றும் 8 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய வசதிகளையும் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. பாதுகாப்பை பொறுத்தவரையில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகளும் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுகின்றன.

இந்த வரிசையில்தான் நாங்கள் மேலே சொன்ன புதிய வசதிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது கூடுதலாக வழங்கியுள்ளது. ஆனால் இந்த வசதிகளை கூடுதலாக வழங்கியுள்ளதற்காக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் விலையை உயர்த்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 11.89 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இந்த விலையிலேயே டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும்.
டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 19.2 kWh பேட்டரி ஆப்ஷன் ஒன்றாகும். மற்றொன்று 24 kWh பேட்டரி ஆகும். இதில், முதலாவது பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் எனவும், 2வது பேட்டரியின் டிரைவிங் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, டாடா டியாகோ இவி மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது. தற்போது விலையை உயர்த்தாமல் கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால், இன்னும் அதிக வாடிக்கையாளர்களை டாடா டியாகோ இவி கவரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








