மலிவு விலை இ-கார் என்கிற இடத்தை தட்டி பறிச்சுட்டாங்க.. இருந்தாலும் இந்த டாடா கார் விற்பனையில் ஜொலிக்குது!

இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடலாக இப்போது எம்ஜி (MG) நிறுவனத்தின் கோமெட் இவி (Comet EV) காட்சியளிக்கின்றது. இதன் இப்போதைய விற்பனை விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரத்து 800 ஆகும். இந்த காரை 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' எனும் திட்டத்தின்கீழும் வாங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின்கீழ் வாங்கும்போது ரூ. 4.99 லட்சத்திற்கே கோமெட் இவி-யை வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த திட்டத்தின்கீழ் வாங்கும்போது பேட்டரிக்கான கட்டணமாக ஒவ்வொரு கிமீ பயன்பாட்டிற்கும் 2 ரூபாய் 50 காசுகள் செலுத்த வேண்டும்.

இத்தகைய குறைவான விலையைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி காட்சியளிக்கின்றது. அதேசமயம், இதன் வருகைக்கு முன்னர் வரை இந்த இடத்தை டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் ஓர் தயாரிப்பே அலங்கரித்து வந்தது. டியாகோ இவி (Tiago EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடல்தான் அது ஆகும்.

Tata tiago ev successfully reached 50 000 deliveries

ரூ. 8.49 லட்சம் என்கிற விலைக்கே இந்த எலெக்ட்ரிக் கார் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது இதே எலெக்ட்ரிக் கார் மாடல் ரூ. 7.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலைக் கொண்ட மின்சார காரே தற்போது விற்பனையில் ஓர் புதிய மைல் கல்லை எட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த காரை இதுவரை 50 ஆயிரம் இந்திய வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டிற்கு ஓட்டிச் சென்றிருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது, 50 ஆயிரம் யூனிட்டுகள் வரை டியாகோ இவி டெலிவரி வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் என்கிற மகுடத்தை டியாகோவி இவி-யிடம் இருந்து எம்ஜி கோமெட் இவி தட்டி பறித்திருந்தாலும், அது விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

Tata tiago ev front view

இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமிகம் செய்யப்பட்டது. மொத்தமாக இந்த எலெக்ட்ரிக் கார் ஏழு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் காரை இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலும் வாங்கிக் கொள்ள முடியும்.

19.2 kWh மற்றும் 24 kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளே டியாகோ இவியில் வழங்கப்படுகின்றன. முதல் ஒன்றில் ஓர் முழு சார்ஜில் 221 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது ஒன்றில் 275 கிமீ ரேஞ்சையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இதேபோல் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் கார் சிறந்த ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், 17.78 செமீ அளவுள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இதுதவிர, லெதர் போர்த்தப்பட்ட இருக்கை, புரஜெக்டர் வகை ஹெட்லேம்ப், ஹைப்பர் ஸ்டைல் வீல்கள், எல்இடி டிஆர்எல், தட்டையான அடிப்பக்கம் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட அம்சங்களை இந்த கார் தாங்கியிருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, இந்த காரை செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றில் இணைக்கும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று ஏகப்பட்ட அம்சங்களை தாங்கி இருக்கின்ற காரணத்தினாலும், விலை குறைவாகக் கிடைக்கின்ற காரணத்தினாலும் டியாகோ இவிக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்பு இந்தியாவில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த காரை டாடா மோட்டார்ஸ்-ம் பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வழங்க முன் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் தன்னுடைய அனைத்து மின்சார கார்களையும் பேட்டரி அஸ் எ சர்வீஸ் எனும் திட்டத்தின்கீழ் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதனால், அதன் மின்சார கார்களின் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை டியாகோ இவி உள்ளிட்ட நிறுவனத்தின் மற்ற இ-கார்களின் விற்பனையை இன்னும் பலமடங்காக அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 25, 2024, 21:45 [IST]
English summary
Tata tiago ev has successfully reached 50000 deliveries since its launch
மேலும்... #tata motors #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X