டாடா இப்படி செய்யும்னு எதிர்பாக்கவே இல்ல... இருந்தாலும் எல்லாரும் இந்த எலெக்ட்ரிக் காரைதான் வாங்க போறாங்க!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இந்த நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களின் விலைகளை தற்போது அதிரடியாக மாற்றியமைத்துள்ளது. இதன்படி டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய மூன்று எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதில், டாடா டியாகோ இவி காரின் விலை உயர்வு குறித்த தகவல்களை பார்க்கலாம். எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த இந்த காரின் விலை 5,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tata Tiago EV

அவை எக்ஸ்இ (XE), எக்ஸ்டி (XT), எக்ஸ்இஸட் ப்ளஸ் (XZ Plus) மற்றும் எக்ஸ்இஸட் ப்ளஸ் டெக் (XZ Plus Tech) ஆகியவை ஆகும். அதே நேரத்தில் மீடியம் ரேஞ்ச் (Medium Range) மற்றும் லாங் ரேஞ்ச் (Long Range) என இரண்டு வெர்ஷன்களில் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்.

இதில் மீடியம் ரேஞ்ச் வெர்ஷனில் 19.2 kWh பேட்டரி ஆப்ஷனும், லாங் ரேஞ்ச் வெர்ஷனில் 24 kWh பேட்டரி ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் ரேஞ்ச் என்ன தெரியுமா? மீடியம் ரேஞ்ச் வெர்ஷனின் ரேஞ்ச் 250 கிலோ மீட்டர்கள் எனவும், லாங் ரேஞ்ச் வெர்ஷனின் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Citroen eC3

இனி டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் வேரியண்ட்கள் வாரியான புதிய விலை விபரத்தை பார்க்கலாம். இந்த காரின் எக்ஸ்இ மீடியம் ரேஞ்ச் வெர்ஷனின் விலை தற்போதைய நிலையில் 8.69 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் எக்ஸ்டி மீடியம் ரேஞ்ச் வெர்ஷனின் விலை 9.34 லட்ச ரூபாயாக இருக்கிறது.

மறுபக்கம் எக்ஸ்டி லாங் ரேஞ்ச் வெர்ஷனின் விலை 10.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் எக்ஸ்இஸட் ப்ளஸ் லாங் ரேஞ்ச் வெர்ஷனின் விலை 11.09 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் எக்ஸ்இஸட் ப்ளஸ் டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச் வெர்ஷனின் விலை 11.59 லட்ச ரூபாயாக உள்ளது.

அதே நேரத்தில் எக்ஸ்இஸட் ப்ளஸ் லாங் ரேஞ்ச் (7.2 kW சார்ஜருடன்) வெர்ஷனின் விலையும் 11.59 லட்ச ரூபாயாக இருக்கிறது. இறுதியாக எக்ஸ்இஸட் ப்ளஸ் டெக் லக்ஸ் லாங் ரேஞ்ச் வெர்ஷனின் விலை 12.09 லட்ச ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த விலை உயர்வு காரணமாக டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் விற்பனை பாதிக்கப்படாது என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் இது சிறிய அளவிலான விலை உயர்வுதான். எனவே எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு, டாடா டியாகோ இவி தொடர்ந்து விற்பனையில் சவால் அளிக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 6, 2024, 22:36 [IST]
English summary
Tata tiago ev new price list check here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+