28 கிமீ மைலேஜை வாரி வழங்கற காரை அடிமாட்டு விலையில் விக்கறாங்களா! இந்த சான்ஸை மட்டும் 'மிஸ்' பண்ணீர கூடாது!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா டியாகோ காரின், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 4,733 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9,463 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 50 சதவீத வீழ்ச்சியாகும்.
இது மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சி என்பதால், இந்தியாவில் நடப்பு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில், டாடா டியாகோவால், 7வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்துள்ளது. டாடா டியாகோ கார், பெட்ரோல் (Petrol), சிஎன்ஜி (CNG) மற்றும் எலெக்ட்ரிக் (Electric) ஆகிய வெர்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இவற்றின் மொத்த விற்பனை எண்ணிக்கையையே, நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ளோம். அப்படி இருந்தும் கூட, டாடா டியாகோ கார், விற்பனையில் 50 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்திருப்பது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களை பொறுத்தவரையில், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன்களின் ஆரம்ப விலை வெறும் 5 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது ஓரளவிற்கு குறைவான விலையில் கிடைக்க கூடிய காராக இருந்தாலும் கூட, சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது.

டாடா டியாகோ காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.01 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், பெட்ரோல்/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 19.43 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் சிஎன்ஜி இன்ஜின், இதை விட அதிக மைலேஜ் வழங்க கூடியது.
சிஎன்ஜி/மேனுவல் வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 26.49 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், சிஎன்ஜி/ஏஎம்டி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 28.06 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் டாடா டியாகோ இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 7.99 லட்ச ரூபாயாக இருக்கிறது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். இதன் ஒரு பேட்டரி ஆப்ஷன் 250 கிலோ மீட்டர் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) வழங்கும் எனவும், மற்றொரு பேட்டரி ஆப்ஷன் 315 கிலோ மீட்டர் டிரைவிங் ரேஞ்ச் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இவை எல்லாம், டாடா டியாகோ காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








