இந்தியால இப்படி ஒரு கார் விற்பனைக்கு வந்திருப்பது இதுவே முதல் முறை! விலை இவ்ளோதானா! மிரள வைத்த டாடா!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களை (CNG Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) என அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு சிஎன்ஜி காரிலும், ஆட்டோமேட்டிக் (Automatic) கியர் பாக்ஸ் ஆப்ஷன் இல்லை என்ற குறை மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. அந்த குறையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது போக்கியுள்ளது. ஆம், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் கூடிய இந்தியாவின் முதல் சிஎன்ஜி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Tata Tiago CNG

அவை டாடா டியாகோ சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் (Tata Tiago CNG Automatic) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் (Tata Tigor CNG Automatic) ஆகியவை ஆகும். டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் ஆகிய 2 சிஎன்ஜி கார்களிலும் இதற்கு முன்பாக 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த கார்களில் தற்போது 5 ஸ்பீடு ஏஎம்டி (AMT) கியர் பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்பு வழங்கப்பட்டு வந்த அதே 1.2 லிட்டர், 3 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான் தற்போதும் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

Tata Tiago, Tigor CNG AMT

பெட்ரோல் மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 ஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் 73 ஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனையும் மட்டுமே உருவாக்கும். ஆனால் பவர் அவுட்புட் சற்று குறைவு என்றாலும் கூட, சிஎன்ஜி மூலம் இயங்கும்போது சிறப்பான மைலேஜ் (Mileage) கிடைக்கும்.

டாடா டியாகோ சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கும். அவை XTA, XZA+, and XZA NRG ஆகும். இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7.90 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கம் டாடா டிகோர் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் கார் மொத்தம் XZA மற்றும் XZA+ என மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.85 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 9.55 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே எக்ஸ் ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி கார்களின் ஆட்டோமேட்டிக் வெர்ஷன்களை, டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்கள் மூலமாகவோ முன்பதிவு (Booking) செய்து கொள்ளலாம். முன்பதிவு தொகை 21 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிஎன்ஜி காரில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷனை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இவை இரண்டுமே நல்ல ஆப்ஷன் ஆகும். வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், இவை விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 8, 2024, 15:58 [IST]
English summary
Tata tiago tigor cng automatic launched price variants all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+