மைலேஜை வாரி வழங்கும் 2 புதிய கார்களை களமிறக்கும் டாடா! இந்தியால இந்த மாதிரி கார்கள் வருவது இதுதான் முதல் முறை!

இந்திய சந்தையில் டாடா டியாகோ சிஎன்ஜி (Tata Tiago CNG) மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி (Tata Tigor CNG) ஆகிய 2 கார்களும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 சிஎன்ஜி கார்களிலும், 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

பெட்ரோல் மூலமாக இயங்கும்போது, இந்த இன்ஜின் அதிகபட்சமாக 85 பிஹெச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் 72 பிஹெச்பி மற்றும் 95 என்எம் டார்க் ஆக குறைந்து விடும். ஆனால் சிஎன்ஜி சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்க கூடியது (மைலேஜ் விபரங்களை செய்தியின் பிற்பகுதியில் பார்க்கலாம்).

Tata Tiago iCNG

தற்போதைய நிலையில் இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் (Five-speed Manual Gear Box) ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய 2 கார்களிலும் கூடிய விரைவில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் (Automatic Gear Box) ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரவுள்ள முதல் சிஎன்ஜி கார்கள் என்ற பெருமையை டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய 2 கார்களும் பெறவுள்ளன. ஆம், இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் எந்தவொரு சிஎன்ஜி காரிலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் கிடையாது.

Tata Tigor iCNG

எனவே டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய 2 கார்களும் இந்தியாவில் புதிய அத்யாயம் ஒன்றை தொடங்கி வைக்கவுள்ளன. அனேகமாக இன்னும் ஒரு சில வாரங்களில், டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய 2 கார்களிலும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 6.55 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 8.20 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் இந்த சிஎன்ஜி காரின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 26.49 கிலோ மீட்டர்கள் ஆகும்.

மறுபக்கம் டாடா டிகோர் சிஎன்ஜி காரின் ஆரம்ப விலை 7.80 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 8.95 லட்ச ரூபாயாகவும் உள்ளது. இந்த சிஎன்ஜி காரின் மைலேஜ் ஒரு கிலோவிற்கு 26.49 கிலோ மீட்டர்கள் ஆகும். நாங்கள் இங்கே குறிப்பிட்டிருப்பது அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என்பதால், டாடா டியாகோ சிஎன்ஜி மற்றும் டாடா டிகோர் சிஎன்ஜி ஆகிய 2 கார்களின் மைலேஜிலும் சிறிய அளவிலான மாற்றம் இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட இதே அளவிலான மைலேஜ்தான் இருக்கும். அதே நேரத்தில் விலை சற்று அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனினும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் கூடிய ஒரு சிஎன்ஜி காரை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இவை இரண்டும் நல்ல ஆப்ஷனாக இருக்கலாம். சிஎன்ஜி கார்களில் முதல் முறையாக ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுவதால், இவை விற்பனையில் சாதிக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 23, 2024, 23:35 [IST]
English summary
Tata tiago tigor cng automatic variants launch soon all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+