சிஎன்ஜி காருனாலே இனி டாடா டிகோர்தான்.. ஓட்டி பார்த்ததுல அசந்து போயிட்டோம்! இதோ ரைடு ரிவியூ வீடியோ!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. ஆனால், சிஎன்ஜி கார் பிரிவில் எந்தவொரு நிறுவனமும் ஏஎம்டி ஆப்ஷனை வழங்கவில்லை. இது ஓர் மிகப் பெரிய குறையாக இருந்து வந்த நிலையில், நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இந்த குறையை தீர்த்து வைக்கும் டிகோர் மற்றும் டியாகோ ஆகிய சிஎன்ஜி கார் மாடல்களில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் அம்சம் கொண்ட டிகோர் ஐசிஎன்ஜி கார் மாடலையே சமீபத்தில் நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். இந்த ரிவியூவின் வாயிலாக அந்த கார் பற்றிய பல்வேறு தகவல்களை நாங்கள் அறிந்துக் கொண்டோம். அதுபற்றிய தகவலையே வீடியோவாக உங்களுக்கு தொகுத்து இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

டாடா மோட்டார்ஸ் அதன் மற்ற சிஎன்ஜி கார்களை போலவே இந்த சிஎன்ஜி கார்களிலும் இரட்டை சிலிண்டர் செட்-அப்பையே டாடா மோட்டார்ஸ் வழங்கி இருக்கின்றது. இவை சுமார் 70 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். இத்துடன், பெட்ரோலை நிரப்பிக் கொள்ளும் விதமாக ஃப்யூவல் டேங்கும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

Tata tigor icng amt ride review video

அவசர தேவையின்போது பெட்ரோலை பயன்படுத்தி காரை இயக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்து விதமான நிறம் மற்றும் 3 விதமான வேரியண்ட் தேர்வுகளில் டிகோர் ஐசிஎன்ஜி ஏஎம்டி விற்பனைக்குக் கிடைக்கிறது. ஒரு முறை முழுமையாக சிஎன்ஜி மற்றும் பெட்ரோலை நிரப்பினால் இந்த காரில் 700 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை நம்மால் பயணித்துக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 21, 2024, 17:02 [IST]
English summary
Tata tigor icng amt ride review video we explained full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+