அரபு நாடுகளின் தலையில் இடியை இறக்க போகும் இந்தியா... இதுக்காகதான் டாடாவை சோறு போட்டு வளத்தி விட்றாங்களா!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் முதல் இடத்தில் இருந்து வரும் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). தற்போதைய நிலையில் மொத்தம் 4 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா பன்ச் இவி (Tata Punch EV) மற்றும் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகியவை ஆகும்.

வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வரும் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தம் 10 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tata Nexon EV

அதாவது 4 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் உள்ள நிலையில், மேலும் 6 புதிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், டாடா கர்வ் இவி (Tata Curvv EV) மிகவும் முக்கியமானதாகும். அனேகமாக இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் கார் என கூறப்படுகிறது.

இந்திய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV), மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) மற்றும் ஹோண்டா எலவேட் இவி (Honda Elevate EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனையில் போட்டியிடும்.

Tata Punch EV

அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை காலத்தில், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் டாடா சஃபாரி இவி (Tata Safari EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த 2 எலெக்ட்ரிக் கார்களும், வரும் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து டாடா சியாரா இவி (Tata Sierra EV) மற்றும் டாடா அவின்யா இவி (Tata Avinya EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளன.

ஒட்டுமொத்தத்தில் வரும் 2025ம் ஆண்டின் இறுதிக்குள் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு எலெக்ட்ரிக் கார்களை மட்டும் விற்பனை செய்வதற்கான பிரத்யேக ஷோரூம்களை அதிகளவில் திறக்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு புத்தம் புதிய தயாரிப்புகளின் வருகையால், டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தற்போதைய சூழலை போலவே, எதிர்காலத்திலும் இந்திய சந்தையின் நம்பர்-1 எலெக்ட்ரிக் கார் நிறுவனம் என்ற மகுடத்தை தலையில் சூடியிருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் மூலம், ஒரு வகையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உதவி செய்ய போகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்க வேண்டும் என்பது மத்திய அரசின் கனவாகும்.

இது நடக்கும்பட்சத்தில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் பிரகாசமாக உள்ளன. அத்துடன் இந்திய சாலைகளில் சுற்றுச்சூழலுக்கு நட்பான எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்தால், அது காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கவும் உதவி செய்யும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 1, 2024, 14:09 [IST]
English summary
Tata to launch 6 new electric cars in india by 2025 all details here
மேலும்... #tata motors #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+