நாங்களும் திருப்பி அடிப்போம்! கெத்த விட்டு கொடுக்காம டாடா செய்த தரமான சம்பவம்.. உசுர காப்பாத்தும் அம்சம் ஃப்ரீ

டாடா (Tata)வின் தயாரிப்புகள் பெரும்பாலானவை அதிக பாதுகாப்பு திறன்மிக்கவை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த விஷயத்திலேயே டாடாவை அடிக்க (பின்னுக்கு தள்ள) தொடங்கி இருக்கின்றன மற்ற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள். குறிப்பாக, மாருதி சுஸுகி (Maruti Suzuki) இதில் இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடல் குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்வில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை பெற்று ஒட்டுமொத்த வாகன உலகையும் வியப்பில் ஆழ்த்திருக்கின்றது.

இதைத்தொடர்ந்து, மஹிந்திராவின் முக்கிய தயாரிப்புகள் சிலவும் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (XUV 3X0), எக்ஸ்யூவி 400 இவி (XUV 400EV) மற்றும் தார் ராக்ஸ் (Thar Roxx) ஆகிய கார் மாடல்களே 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன.

Tata harrier and safari receive new updates

Image Courtesy: TATA HARRIER OWNERS CLUB INDIA பாரத் என்சிஏபி (Bharat NCAP) நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த கார்கள் அதிக பாதுகாப்பு மதிப்பெண்களைப் பெற்றன என்பது கவனிக்கத்தகுந்தது. மஹிந்திரா கார்கள் மற்றும் மாருதி சுஸுகி கார்கள் ஐந்து நட்சத்திர பாதுகாப்பை ரேட்டிங்கைப் பெற்றிருப்பது அதன் வாடிக்கையாளர்களுக்கும், அந்த நிறுவனங்களுக்கும் வேண்டுமானால் மகிழ்ச்சியானதாக இருக்கலாம்.

ஆனால், டாடா மோட்டார்ஸ்க்கு இது இக்கட்டான சூழலை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தியர்கள் பலர் இந்த பிராண்டின் தயாரிப்புகளை நாட அது அதிக பாதுகாப்பு திறன்மிக்கது, மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளில் இந்த அளவு அதிக பாதுகாப்பை பெற முடியாது என்பதே காரணமாக உள்ளது.

இந்த மாதிரியான சூழலிலேயே 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று மஹிந்திரா மற்றும் மாருதி கார்கள் டாடாவிற்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தின. இந்த சூழலையே தற்போது மிகவும் அசால்டாக கையாள தொடங்கி இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். அந்த நிறுவனம் தன்னுடைய மிக மிக அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார்களை கூடுதல் பாதுகாப்பு திறன்மிக்கவையாக மாற்றியிருக்கின்றது.

நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களாக ஹாரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) இருக்கின்றன. இவை இரண்டும் பாதுகாப்பில் 5க்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றன. இந்த நிலையிலேயே பயணிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக அடாஸ் (ADAS) அம்சத்தில் கூடுதல் சில பாதுகாப்பு வசதிகளைச் சேர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்டரிங் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் ஆகிய அம்சங்களையும் இந்த கார்களில் கிடைக்கும் வகையில் வகையில் அடாஸ் தொழில்நுட்பத்தில் டாடா மாற்றத்தைச் செய்திருக்கின்றது. ஆகையால், குறிப்பிட்ட லேனிலேயே பயணித்தல் மற்றும் லேனின் மையப் பகுதியில் பயணித்தல் உள்ளிட்டவற்றை இது தானாகவே செய்யும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அம்சங்களை அது இரண்டு கார் மாடல்களின் குறிப்பிட்ட சில வேரியண்டுகளிலேயே வழங்கி இருக்கின்றது.

அட்வென்சர் பிளஸ் ஏ (Adventure+ A), ஃபியர்லெஸ் பிளஸ் (Fearless+) மற்றும் அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் (Accomplished+) ஆகிய தேர்வுகளிலேயே வழங்கி இருக்கின்றனர். இந்த வேரியண்டுகளை ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களாலும் பெற்றுக் கொள்ள முடியும் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக, கூடுதல் கட்டணமின்றியே பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த புதிய அம்சம் சேர்ப்புடன் சேர்த்து புதிய வண்ண தேர்வையும் இந்த கார்களில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்திருக்கின்றது. அந்தவகையில், ஹாரியர் கார் மாடலின் அட்வென்சர் வேரியண்டில் ஆஷ் கிரே நிறத்தையும், ஃபியர்லெஸ் வேரியண்டில் சீவீட் கிரீன் நிறத்தையும் கிடைக்கின்ற வகையில் டாடா மோட்டார்ஸ் மாற்றம் செய்திருக்கின்றது.

தொடர்ந்து, இந்த கார் மாடலின் ஸ்மார்ட் மற்றும் ப்யூர் வேரியண்டுகளை பெப்பிள் கிரே மற்றும் கோரல் ரெட் ஆகிய நிறங்களில் வாங்கிக் கொள்ள முடியும். இதைபோலவே சஃபாரி கார் மாடலிலும் சில மாற்றங்களை டாடா மோட்டார்ஸ் செய்திருக்கின்றது. இந்த கார் மாடல்களுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இந்த வேலையை அது பார்த்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடாவின் தயாரிப்புகளுக்கு என தனி டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்ட் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மற்றும் உடனடி நிவாரணம் வழங்குவதில் பெயர்போனவையாக இருக்கின்றன. இதனாலேயே பலர் இப்போதும் டாடாவின் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிலையிலேயே தற்போது தன்னுடைய பாதுகாப்பான கார்களை அதிக பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியில் டாடா களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 15, 2024, 12:15 [IST]
English summary
Tata upgrades harrier and safari adas tech more details
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+