மக்கள் மனதை குளிர வச்சுட்டாங்க.. 100 சதவீதம் சாலை வரி ரத்து.. பதிவு கட்டணமும் வேண்டாமாம்..

இந்தியா முழுக்க மின்சார வாகன (Electric Vehicle) பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் இப்போதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை உறுதிப்படுத்துகின்ற விதமான ஓர் சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. மக்களை மின்சார வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்களின் மிகப் பெரிய அளவில் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. தெலங்கானா மாநிலத்திலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றது.

இந்த 100 சதவீத பதிவு கட்டணம் ரத்து மற்றும் சாலை வரி ரத்து என்பது மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மின்சார ஆட்டோ ரிக்சா மற்றும் மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Road tax exemption

மேலும், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து மின்சார வாகனங்களுக்கும் அவற்றின் வாழ்நாள் முழுக்க சாலை வரி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், தெலங்கான அரசு கொண்டு வந்திருக்கும் இந்த திட்டமானது 2026 டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது, இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே இத்திட்டம் நிலுவையில் இருக்கும். இதற்கு பின்னர் மீண்டும் திட்டம் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ வார்த்தைகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்தியாவில் காற்று மாசுப்படு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையைக் கருத்தில் கொண்டே மின் வாகன ஊக்குவிப்பை அரசுகள் கையில் எடுத்திருக்கின்றன. மின்சார வாகனங்கள் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல், வரிச் சலுகைகள் அறிவிக்கப்படுவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெலங்கானா அரசின் திட்டத்தால் மாநிலத்தில் வரும் நாட்களில் மின்சார வாகங்களின் விற்பனை மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாலை வரி ரத்து மற்றும் வரி சலுகை காரணத்தினால் மிகப் பெரிய அளவில் மின்சார வாகனங்களின் விலை குறைய இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

இப்போதைய நிலவரப்படி இரண்டு சக்கர வாகனங்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் ரூ. 600-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 1,200 வரையிலும் பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. இதேபோல், புதிய வாகனங்களுக்கான சாலை வரியாக 9 சதவீதம் தொடங்கி 12 சதவீதம் வரை வரியாக வசூல் செய்யப்படுகின்றது.

இது உள்ளூரில் தயாரிக்கப்படும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மிகப் பெரிய வரிகளில் இருந்தே தற்போது மின்சார வாகனங்கள் தப்பி இருக்கின்றன. ஆகையால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வாங்கும் பிளானில் இருந்தவர்கள் தற்போது மின்சார வாகனங்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்பை விட இப்போது மின்சார வாகனங்களின் விற்பனை மிகப் பெரிய அளவில் சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இதற்கு சான்றாக எம்ஜி நிறுவனம் இருக்கின்றது. இந்த நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்த விண்ட்ஸர் இவிக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சென்னையில்கூட நேற்று ஒரே நாளில் 100க்கும் அதிகமான யூனிட்டுகள் டெலிவரி கொடுக்கப்பட்டன. இதுமாதிரியான சம்பவங்கள் வரும் நாட்களில் தெலங்கானா மாநிலத்திலும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 18, 2024, 12:01 [IST]
English summary
Telangana government implements 100 percent exemption from road tax and registration fees on ev
மேலும்... #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+