டிரைவரே தேவையில்ல! ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் டெஸ்லா ரோபோடாக்ஸி
டெஸ்லா நிறுவனம் வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி தனது ரோபோடாக்ஸியை முதன்முறையாக காட்சிப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. நீண்ட ஆண்டுகளாக இது குறித்து எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது இந்த அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா நிறுவனம் உலகில் முதன்முதலாக அறிமுகமானபோது தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தும் என்ற பெயரில் தான் அறிமுகமானது, இந்நிறுவனம் முற்றிலுமாக தானியங்கி தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியது, ஆனால் அதற்கான பல்வேறு சிக்கல்கள் இருந்ததால்ல எப்பொழுதும் டிரைவர் இருக்கும் வகையில் இயங்கும் தானியங்கி கார்களை உருவாக்கியது.

இது மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றது, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து டெஸ்ட்லா கார்கள் சிறப்பான விற்பனையில் இருந்து வந்தன. இந்நிலையில் சமீப காலமாக டெஸ்லா கார்கள் விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன. இதற்கு டெஸ்லா கார்கள் விலை அதிகமாக இருப்பது மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிறுவனம் முழுமையாக தானியங்கியாக இயங்கும் ரோபோ டாக்ஸி ரக கார்களை அறிமுகப்படுத்தப் போவதாக வதந்திகள் வெளியாகி வந்திருந்தது. இது குறித்த பேச்சு மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த கார்கள் அறிமுகமான நிச்சயம் டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் மாற்றத்தையும் வளர்ச்சியையும் தரும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றே பகிர்ந்துள்ளார். அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி டெஸ்லா நிறுவனம் தனது ரோபோடாக்ஸி வாகனத்தை முதன் முதலாக காட்சிப்படுத்தும் என தெரிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெஸ்லா நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மொத்தமே 46,561 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது மிக குறைவான விற்பனை எண்ணிக்கையாகும். இந்த விற்பனை சரிவிற்கு சீன வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது டெஸ்லாவிற்கு போட்டியாக எலெக்ட்ரிக் வாகனங்களை மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. இதனால் மக்கள் பலர் அந்த கார்களை வாங்க விரும்புகின்றனர்.

இந்த சில நிறுவனங்கள் தற்போது டெஸ்லா நிறுவனத்திற்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இந்த சில நிறுவனங்களுக்கு போட்டியாக குறைந்த விலை கார்களை டெஸ்லா நிறுவனமும் கொண்டு வந்தால் தான் இந்த போட்டியை சமாளிக்க முடியும் என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் தற்போது டெஸ்ட்ல நிறுவனம் இயங்கி உள்ளது.
டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே கடந்து 2019-ம் ஆண்டு சைபர் டிரக் என்ற வாகனத்தை காட்சிப்படுத்தி இருந்தது. ஆனால் இந்த வாகனத்தை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டது. இதற்கு முக்கியமான காரணம் கொரோனா தான். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் இந்த வாகனத்தின் தயாரிப்பு தள்ளி போனது.
இந்நிலையில் நிறுவனம் தனது பணிகளை துரிதப்படுத்தி ரோபோடாக்ஸி ரக வாகனங்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் பட்சத்தில், இது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்த வாகனம் ஆட்டோமொபைல் உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் துவங்கப்பட்டதற்கான காரணமே தானியங்கி கார்களை கொண்டு வர வேண்டும் என்பதுதான். அந்த சாதனை தற்போது நிகழப் போகிறது. இதற்கான தேதியை தற்போது குறித்துள்ளது. இந்த ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு ஆட்டோமொபைல் உலகில் தானியங்கி கார்கள் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









