சென்னைக்கு வருகிறாரா எலான் மஸ்க்? டெஸ்லா காரால் கூரையை பிச்சு கொட்டப்போகும் வேலை வாய்ப்புகள்!

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் ஆலையை அமைப்பதற்கான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு வருகை தர உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில், தற்போது அது குறித்து அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைக்க அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருப்பது டெஸ்லா நிறுவனம் தான். இந்நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. மக்கள் பலரின் நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய கார் சந்தையான அமெரிக்கா மற்றும் சீனாவில் இந்த கார்கள் விற்பனையாகி வருகின்றன.

tesla tamilnadu

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கார் சந்தையாக உள்ள இந்தியாவில் இதுவரை டெஸ்லா நிறுவனம் தனது காலடி தடத்தை எடுத்து வைக்கவில்லை. இதற்கு முக்கியமான காரணம் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்தால் 100% வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் காரின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக டெஸ்லா நிறுவனம் இந்தியா விற்பனையை தவிர்த்து வந்தது.

ஆனால் இந்தியா போன்ற அதிக ஆட்டோமொபைல் பயன்படுத்தும் மக்கள் கொண்ட நாளில் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் களமிறங்கவில்லை என்றால், அது அந்த நிறுவனத்திற்கு தான் நஷ்டம் என்பதை புரிந்து கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் இந்தியாவில் ஆலையை அமைத்து வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது மத்திய அரசுக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையே நடந்து வருகிறது.

tesla tamilnadu

தற்போது மத்திய அரசு இந்தியாவில் ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு முதலில் வெளிநாட்டு தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த இறக்குமதி வரியில் குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி விரைவில் இந்தியாவில் டெஸ்லா நிறுவன தயாரிப்புகளின்விற்பனை என்பது துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விஷயங்களை முடிவு செய்வதற்காக டெஸ்லா நிறுவனத்தின் ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவிற்கு வருவது உறுதியாகியுள்ளது. இந்தியாவிற்கு இவர் வரும்போது பிரதமர் மோடியை நேரில் சந்திப்பார் என்ற பேச்சு தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வரும்போது எந்த இடத்தில் டெஸ்லா நிறுவனத்தின் ஆலை அமைய உள்ளது என்ற முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

tesla tamilnadu

இந்தியாவில் பல்வேறு இடங்களை நிறுவனத்தின் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு இருந்தாலும், இறுதியாக தமிழகத்தை தான் தேர்வு செய்வார்கள் என்ற பேச்சு நிலவி வருகிறது. இது குறித்து ஏற்கனவே தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பேசியிருந்தார். அப்பொழுது டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் ஆலையை அமைப்பதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது தமிழகம் தான் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாக இருக்கிறது. என்றும் விரைவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் தமிழகத்தை முன்னணிக்கு கொண்டு வருவதற்கு அரசு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக தற்போது டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் ஆலையை அமைப்பதற்காக முடிவு செய்ய தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது.

சென்னை அருகே டெஸ்லா நிறுவனம் ஆலையை அமைத்தால் இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் ஆலையை அமைக்க தான் முடிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் தமிழகத்தில் ஆலை அமைத்தால் அது தமிழகத்தின் பொருளாதாரத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தையும் வளர்ப்பதற்கான பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பலர் தமிழகத்தில் இந்நிறுவனத்தின் கீழ் பணியில் சேர ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதே நேரம் மக்களின் வாழ்வாதாரமும் பெருகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 18:49 [IST]
English summary
Tesla tamilnadu manufacturing plant planned ahead of elon musk s india visit
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X