டிரைவர் வேலைக்கு ஆப்பு.. தானாக இயங்கும் மினி பேருந்து வெளியீடு.. ஒரே நேரத்துல 20 பேர் போகலாம்!

உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), டிரைவர் இல்லாமல் இயங்கும் திறன் கொண்ட ரோபோ வேன் (Robo-Van)-ஐ வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் மினி பஸ் (Autonomous Bus) வகை வாகனம் ஆகும். நிறுவனம் ரோபோ டாக்சியை வெளியீடு செய்ய இருப்பதாகவே முன்னதாக அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே அது சர்ப்ரைஸாக இந்த வேனையும் வெளியீடு செய்து இருக்கின்றது. இந்த வேனில் ஒரே நேரத்தில் 20 பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே போக்குவரத்துக்கு மிக சிறந்த வாகனமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் மினி பேருந்துகள் மற்றும் வேன்களுக்கு மிக சிறந்த போட்டியாகவும் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், மிகவும் தனித்துவமான தோற்றத்திலேயே டெஸ்லா இந்த ரோபோ வேன்னை தயார் செய்திருக்கின்றது.

Tesla unveils robovan

இதனை பார்க்க மெட்ரோ ரயிலின் முகப்பு பகுதியைப் போல் அது காட்சியளிக்கின்றது. இதற்கேற்ப அதன் வீல்கள் அனைத்தும் வாகனத்திற்குள்ளேயே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பால் அது சாலையில் செல்லும் போது மிதந்துக் கொண்டு செல்வதைப் போன்று இருக்கும். மேலும், இது ஓர் தானியங்கி வாகனம் என்பதால் ஓட்டுநர்களுக்கு தேவையான அம்சங்கள் எதுவும் வழங்கவில்லை.

மிக முக்கியமாக ஸ்டியரிங் வீல்கூட இந்த வாகனத்தில் வழங்கப்படவில்லை. இதுதவிர, ஆக்சலரேட்டர், கிளட்ச் மற்றும் பிரேக் போன்ற அம்சங்களும் இதில் வழங்கப்படவில்லை. எனவே முழுக்க முழுக்க இந்த வாகனம் தன்னிட்சையாக மட்டுமே இயங்கும். மேனுவலாக இந்த வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாது என தெரிகின்றது.

Tesla robovan interior

இந்த வேனை பயணிகள் வாகனமாக மட்டுமல்ல மினி மோட்டார் ஹோட்டலாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என டெஸ்லா தெரிவித்திருக்கின்றது. ஆகையால், எதிர்காலத்தில் இது விற்பனைக்கு வரும்போது அது மோட்டார் ஹோட்டல் வெர்ஷனிலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தானாக இயங்கும் வாகனங்கள் இந்த உலகத்தில் அறிமுகம் செய்யப்படுவது இது முதல் முறையல்ல.

ஏற்கனவே உலக நிறுவனங்கள் பல டெஸ்லா தற்போது வெளியீடு செய்திருப்பதைப் போன்ற தன்னாட்சி வசதிக் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. ஆனால், இந்த வாகனங்களை அது உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. விரைவிலேயே இந்த வாகனம் உற்பத்திக்கு அனுப்பி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tesla robovan seat

இந்த வாகனத்தின் தானியங்கி திறனுக்காக டெஸ்லா நிறுவனம் ஏஐ (AI) டிரைவிங் அம்சத்தை வழங்கி இருப்பதாக கூறப்படுகின்றது. 2026 ஆம் ஆண்டிற்குள் இதன் உற்பத்தியை டெஸ்லா தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், சீக்கிரமே இந்த வாகனத்தை சாலையில் பார்கக முடியும் என தெரிகின்றது.

இப்போதைய நிலவரப்படி டெஸ்லா நிறுவனத்தின்கீழ் மாடல் எஸ் (Model S), மாடல் 3 (Model 3), மாடல் எக்ஸ் (Model X), மாடல் ஒய் (Model Y), சைபர் டிரக் (CyberTruck) ஆகிய கார் மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் விரைவில் டெஸ்லா நிறுவனம் விரைவில் ரோபோ டாக்சி மற்றும் ரோபோ வேன் ஆகியவற்றையும் விற்பனைக்கு இணைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனம் இன்னும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அதன் கால் தடத்தைப் பதிக்கவில்லை. விரைவிலேயே அது இந்தியாவில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எப்போது என்பதுதான் மிகப் பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது. இருப்பினும், இந்த நிறுவனத்தின் வருகை மீதான எதிர்பார்ப்பு இந்தியர்கள் மத்தியில் பலமடங்காக அதிகரித்துக் காட்சியளிக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 14:31 [IST]
English summary
Tesla unveils robovan new autonomous vehicle for large groups
மேலும்... #tesla #electric car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X