இந்திய ஏழைகளும் இனி டெஸ்லா காரை வாங்கணும்! கம்மி ரேட்ல காரை இறக்க திட்டம்!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் களமிறங்க திட்டமிட்டு வரும் நிலையில் இந்தியாவிற்குள் இந்த கார் வரும்போது மிகவும் குறைந்த விலை எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான புதிய யுக்தி ஒன்றை டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படி என்ன திட்டம்? எப்படி குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை அநநிறுவனம் எப்படி விற்பனைக்கு கொண்டு வரப்போகிறது என்ற விபரங்களை காணலாம் பாருங்கள்.

டெஸ்லா நிறுவனம் உலக அளவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து உலகின் சிறந்த வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்நிறுவனம் தற்போது இந்தியாவிற்குள் வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது டெஸ்லா நிறுவனத்தின் வருகையால் தங்கள் யுக்திகளை மாற்றி வருகின்றனர்.

Tesla India

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் வரும்போது சர்வதேச அளவில் இருக்கும் அதன் கார்களை இந்தியாவிற்குள் விற்பனை செய்தால் நிச்சயம் விற்பனை ஆகாது என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் சர்வதேச அளவில் இந்நிறுவனத்தின் கார்களின் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்பது தான். இந்தியாவில் குறைந்த விலை கார்களுக்கு அதிக அளவில் மவுசு இருக்கிறது.

டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காரின் விலை தற்போது சர்வதேச மார்க்கெட்டில் 40 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதே விலைக்கு இந்தியாவில் விற்பனைக்கு வந்தால் இந்த காரின் விலை ரூபாய் 33 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும். இவ்வளவு அதிகமான விலைக்கு முக்கியமான காரணம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி தான்.

Tesla India

இந்த காரில் 57.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மூலம் இந்த கார் முழு சார்ஜில் 435 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஒரு எலெக்ட்ரிக் காரின் விலை என்பது பெரும்பாலும் அதன் பேட்டரியிலேயே அதிகமாக இருக்கிறது. பேட்டரி விலையை குறைத்து விட்டால் வாகனத்தின் விலை பெரும் அளவுக்கு குறைந்து விடும்.

தற்போது சர்வதேச அளவில் விற்பனையாகும் காரின் விலையை இந்தியாவில் விற்பனையானால் ரூபாய் 33 லட்சத்திற்கு இந்த கார் விற்பனைக்கு வரும். அப்படி என்றால் இந்த காரை வாங்க இந்தியாவில் மக்கள் பெரும் அளவில் விரும்ப மாட்டார்கள். இந்தியாவில் அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு பொருளாதார வசதி படைத்த மக்களின் எண்ணிக்கை குறைவு தான்.

Tesla India

இந்திய மக்களுக்கு பிடித்தமான காரை பொறுத்தவரை தற்போது ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் தான் நல்ல கார்கள் எல்லாம் இருக்கின்றன. ஹூண்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார்கள் எல்லாம் அந்த விலையில் தான் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. அந்த விலையில் உள்ள கார்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

அப்படி பார்க்கும்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் காரை களத்தில் இறக்கினால் இதே விலை காரை தான் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். அதற்காக டெஸ்லா நிறுவனம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனம் தனது கார்களை களம் இறக்கும் போது குறைந்த விலை கார்களை கொண்டு வருவதற்காக அதன் பேட்டரிய அளவை குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Tesla India

தற்போது உள்ள டெஸ்லா நிறுவனத்தின் பேட்டரி என்பது ஒரு தடவை சார்ஜ் செய்தால் 485 கிலோ மீட்டர் வரை தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தினம் தோறும் 400 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் அளவிற்கு எந்த வாகன ஓட்டிகளும் வாகனம் ஓட்டுவதில்லை. இந்தியாவில் தற்போது 200 முதல் 250 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் கார்களுக்கு நல்ல மவுஸ் இருக்கிறது.

இதை மனதில் வைத்து டெஸ்லா நிறுவனம் தனது பேட்டரியின் அளவை பாதியாக சுருக்கி விரைவாக சார்ஜ் ஏறும் காராக உருவாக்க முடிவு செய்துள்ளது. அதன் மூலம் இந்த டெஸ்லா காரை 15 நிமிடம் சார்ஜ் போட்டால் 200 முதல் 230 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிகிறது.

இதன் மூலம் காரின் விலையை கணிசமான அளவு குறைத்து ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் காரை விற்பனைக்கு கொண்டு வந்து விடலாம் என டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது இந்தியாவில் சிறப்பாக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு டெஸ்லா பலத்த போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஒவ்வொரு நகரங்களுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாக இருக்கும். இதனால் அதிக தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற நெருக்கடியான நாட்டில் நீண்ட தூர பயணம் என்பது தேவையில்லை. அதனால் இந்தியாவில் சர்வதேச மார்க்கெட்டில் உள்ளதை விட குறைந்த பேட்டரி திறன் கொண்ட கார்களை நல்ல விற்பனையில் இருக்கும் கார்களாக அமையும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 6, 2024, 7:00 [IST]
English summary
Tesla weighs smaller batteries for its india car
மேலும்... #டெஸ்லா #tesla
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X